- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படம் பார்த்தேன்... சகிக்க முடியலே... இதுல பார்ட் 2 வேற எடுக்கறாங்க - விளாசித்...

ஜெயிலர் படம் பார்த்தேன்… சகிக்க முடியலே… இதுல பார்ட் 2 வேற எடுக்கறாங்க – விளாசித் தள்ளிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் ராஜகுமாரன். அதன்பிறகு நீ வருவாய் என படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலுடன் ஆகிய படங்களை இயக்கினார். இதில் முதல் படம் தவிர மற்ற 3 படங்களும் படுதோல்வியடைந்தன.

சினிமாவில் வாய்ப்பில்லாத இயக்குனர் ராஜகுமாரன் சமீபமாக யூடியூப் சேனல்களில் ஆர்வமாக பங்கேற்று பேசுகிறார். ஆனால் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசாமல் தமிழ் நடிகர்களை பற்றி விமர்சித்து பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். சமீபத்தில் ராஜகுமாரன் நடிகர் கமல்ஹாசன் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.

- Advertisement -

கமல்ஹாசன் எல்லாம் பெரிய நடிகரே இல்லை. அவர் நடித்த படங்களில் கமல்தான் தெரிவார். அவரது கேரக்டரே தெரியாது என்று கூறியிருந்தார். இது கமல் ரசிகர்களுக்கு பயங்கரமாக கோபப்படுத்தியது. ராஜகுமாரனை கமல் ரசிகர்கள் திட்டியதால் பிறகு அதற்காக ராஜகுமாரன் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து நடிகர் விக்ரம் அவரது மகன் துருவிக்ரம் குறித்தும் ராஜகுமாரன் விமர்சித்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

அதில் இயக்குனர் ராஜகுமாரன் கூறுகையில், நான் இப்ப வருகிற படங்களை எல்லாம் பார்ப்பதே இல்லை. அப்படி தான் ஜெயிலர் படத்தை பார்த்தேன். அந்த படத்தை பார்க்கவே கொடுமையாக இருந்தது. பாதி படத்திலிருந்து ஓடி வந்திருக்கலாம் என்று ஆகி விட்டது. படத்தை சகிக்க முடியலே. 600 கோடி ரூபாய் வசூல் பண்ணி இருக்குன்னு சொல்றாங்க. ப்ளூ பிலிம் எடுத்தால் கூட இன்னும் நல்லா வசூல் பண்ணும்.

இதில் ஜெயிலர் படத்தை பார்ட் 2 வேற எடுக்குறாங்க. அந்த படம் மூலமாக ரஜினி என்ன மக்களுக்கு சொல்லிட்டார்? பணம் வரணும் சம்பளம் ஏறணும் தியேட்டர்காரர்களும் சம்பாதிக் வேணும்ன்னு ரஜினி படம் பண்ணீட்டு இருக்கிறார் என்று அதில் ராஜகுமாரன் பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் குறித்தும் அவரது படம் குறித்தும் இவ்வளவு மோசமான விமர்சனங்கள் செய்த இயக்குனர் ராஜகுமாரன் மீது ரஜினி ரசிகர்கள் பயங்கரமான கோபத்தில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்