- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் டைட்டில் வின்னர் கிடைக்கலையே? - விரக்தியில் மாயா போட்ட பதிவு - இதுல...

பிக்பாஸ் டைட்டில் வின்னர் கிடைக்கலையே? – விரக்தியில் மாயா போட்ட பதிவு – இதுல ரஜினியை எதுக்கு இவங்க இழுத்து விடறாங்கன்னு தெரியலையே?

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்றுடன் நிறைவுக்கு வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய ஆரம்பத்தில் இருந்தே, வீட்டுக்குள் எந்நேரமும் சண்டை சச்சரவு, பிரச்னைகளுக்கு பஞ்சமே இல்லை. அதுவும் கடந்த சீசன்களை விட இந்தமுறை போட்டியாளர்கள், தரை லோக்கலுக்கு இறங்கி விளையாடினர்.

இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை, போட்டியாளர்கள் எந்தளவுக்கு ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங் ஏறும். அதனால் வாராவாரம் வந்த கமல்ஹாசனுக்கும் அவரது பங்குக்கு கொளுத்தி போட்டு விட்டு போனார். அதுவும் வாரம் முழுவதும் பற்றி எரிந்தது.

- Advertisement -

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருப்பவர்கள்தான் விமர்சிக்கப்படுவர். ஆனால், இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனும் கடுமையான விமர்சனங்களில் சிக்கினார். இது ரெட்கார்டு கொடுத்து, பிரதீப் ஆண்டனியை வெளியேற்றிய விவகாரத்தால் வந்த பிரச்னை.

இதற்கிடையே 10 வாரங்கள் கடந்த நிலையிலேயே இந்தமுறை பிக்பாஸ் டைட்டில் வின்னர் விசித்ரா தான் என்ற பேச்சு நிலவியது. ஏனெனில் இந்த சீசன் நிகழ்ச்சியை பொருத்தவரை துவக்கத்தில் இருந்த மிகச்சிறந்த ஒரு போட்டியாளராக, அவர் நிதானத்துடன் நடந்துக்கொண்டதும் மற்றவர்களிடம் பேசியதும், பழகியதும் அதிக பாராட்டை பெற்றது. அதனால் அவர்தான் வின்னர் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

ஆனால் இப்போது பிக்பாஸ் வின்னர் அர்ச்சனாதான் என உறுதியான நிலையில், மாயா டைட்டில் வின்னர் என எதிர்பார்த்த ஒரு தரப்பு பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவருக்கு வின்னர் தந்திருந்தால், இத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவரும் கொஞ்ச நஞ்ச பார்வையாளர்களும் இனி பிக்பாஸ் பார்க்கவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பர்.

வெற்றியை பறிகொடுத்த விரக்தியில், மாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது. அது ‘கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது, படையப்பா படத்தில் கிக்கு ஏறுதே பாடலில் ரஜினி பாடும் ஒரு வரியாகும். அதை எதற்கு மாயா குறிப்பிட்டார். ரஜினி பாட்டுக்கும், இவரது தோல்விக்கும் ஏன் சம்பந்தப்படுத்துகிறார் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்