- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த பிகில் படம் விவகாரம்; அட்லி, கல்பாத்தி அர்ச்சனா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு...

விஜய் நடித்த பிகில் படம் விவகாரம்; அட்லி, கல்பாத்தி அர்ச்சனா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு – இந்த பஞ்சாயத்து தமிழ் சினிமாவுல ஓயவே ஓயாதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனர் ஷங்கர், இந்திய அளவில் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் அட்லி. ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நயன்தாரா, சத்யராஜ், ஜெய், ஆர்யா, நஸ்ரியா, சத்யன் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

அதன்பிறகு தொடர்ச்சியாக 3 விஜய் படங்களை அட்லி இயக்கினார். மூன்று படங்களுமே பெரிய அளவில் மாஸ் ஹிட் படங்களாக விஜய்க்கும், அட்லிக்கும் அமைந்தன. தெறி, மெர்சல், பிகில் என்ற அந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை, ஆதரவை பெற்று வசூல் மழை பொழிந்தது.

- Advertisement -

இந்த படங்கள் தந்த வெற்றியை தொடர்ந்து, பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்க அட்லிக்கு வாய்ப்பு தேடி வந்தது. நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், அட்லிக்கு பெரிய வெற்றியை தந்தது. ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலித்தது.

இனி அடுத்ததாக சல்மான்கான், கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் அட்லி இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் பிகில் படம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் பதிலளிக்க இயக்குனர் அட்லி, படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனாவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

- Advertisement -

கடந்த 2019ம் ஆண்டில் வெளியான படம் பிகில். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். கால் பந்தாட்ட போட்டியை மையப்படுத்திய இந்த படத்தில் கப்பு முக்கியம் பிகிலு டயலாக் பெரிய டிரண்டிங் ஆனது. சிங்கப்பெண்ணே பாடலும் பெரிய அளவில் வைரலானது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த பிகில் படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்திருந்தார். சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர், பிகில் படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் தன்னுடைய கதையை பயன்படுத்தியதற்காக இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா ஆகியோர் ரூ. 10 லட்சம் எனக்குத் தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்த விசாரணையில் பதிலளிக்க அட்லி, அர்ச்சனா கல்பாத்திக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்