அங்காடி தெரு அசுரன் போன்ற பல படங்களில் நடித்தவர் ஏ வெங்கடேஷ். சில டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் திரைப்பட இயக்குனராக இருந்து பிறகு நடிகராக மாறியவர். ஏய் பகவதி தம் குத்து செல்வா வாத்தியார் போன்ற பல படங்களை இயக்கியவர். விஜய் நடித்த ஆக்சன் அதிரடி திரைப்படம் பகவதி படத்தை இயக்கியவர் ஏ வெங்கடேஷ்தான்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஏ வெங்கடேஷ், பகவதி படம் குறித்து கூறியதாவது, பகவதி படத்தில் முதல்வர் கேரக்டர் இடைத்தேர்தலில் நிற்குமாறு பகவதியை கூப்பிடுவார். ஆனால் பகவதி கேரக்டர் இல்லை வேண்டாம் என மறுத்து விடுவார்.
ஆனால் முதலில் இந்த படத்தின் கதையில் விஜய் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்கும் சூழல் வருவது போல் தான் எழுதி இருந்தேன்.
அப்போது பகவதி படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில் ரஜினி நடித்த பாபா படம் வெளியானது. அந்தப் படத்தின் இறுதியில் 7வது மந்திரத்தை முதல்வர் ஆவதற்கு ரஜினி உபயோகிப்பார் என்றுதான் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் பாபா படத்தில் ரஜினி அந்த மந்திரத்தை பயன்படுத்த மாட்டார். ரஜினி சாரே இப்படி செய்ய மறுக்கிறார். விஜய் இப்போதுதான் ஆக்சன் ஹீரோவாக வளர்ந்து வருகிறார். இதில் விஜய் முதல்வர் ஆவது போன்ற காட்சி வைத்தால் அது ரசிகர்கள் மத்தியில் ஓவர் டோஸ் ஆகிவிடுமோ என்கிற பயம் எனக்கு உருவானது.
இது குறித்து விஜயிடம் நான் எடுத்துக் கூறினேன். அதற்கு அவர், கதையில் அப்படி தானே சொன்னீங்க? இப்போது வந்து ஏன் அதை மாத்தறீங்க என்று அவர் கேட்டார். இப்படி காட்சியை மாற்றியதற்கு அவர் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. முழு ஆக்சன் ஹீரோவாக மாறிய பிறகு அடுத்த கட்டமாக இதை பண்ணலாம் என்று நான் அவரை சமாதானம் செய்தேன் என்று ஏ வெங்கடேஷ் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சினிமாவில் முதல்வராகும் காட்சியை இயக்குனர் முதலில் கூறிவிட்டு பிறகு ரஜினி படத்தில் வரும் காட்சியை மனதில் வைத்து அப்படி வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார். அது நடிகர் விஜய்க்கு பலத்த ஏமாற்றத்தை தந்ததால் அப்செட் ஆகியிருக்கிறார். இப்போது நிஜ வாழ்க்கையில் தவெக கட்சி தலைவராக முதல்வர் போட்டிக்கு தளபதி விஜய் தயாராகி வருவதை பார்க்கும் போது சினிமாவில் நிறைவேறாத ஆசை நிஜத்தில் நிறைவேறுமா என்பதற்கு வருகிற சட்டசபை தேர்தலில் பதில் கிடைத்து விடும்.





