- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதல் ஜோடியாக தடை மீறி மலை ஏறிய சீரியல் நடிகை, வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை...

காதல் ஜோடியாக தடை மீறி மலை ஏறிய சீரியல் நடிகை, வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை – காட்டிக்கொடுத்த வலைதள புகைப்படங்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் ராஜா ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். டிமாண்டி காலனி 2 படத்திலும் அர்ச்சனா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

அதே போல் சீரியல் நடிகராக பல டிவி தொடர்களில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இவர் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் பாரதி என்கிற டாக்டர் கேரக்டரில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். இவரும் விஜய் டிவியில் கடந்த 2024ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் அருண் பிரசாத்தும் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரனும் நீண்டகாலமாக காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணமும் செய்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று வந்ததாக அர்ச்சனா தனது வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

மேலும் இப்படி மலை ஏறுவதாக இருந்தால் சூரியம் மறைவதற்குள் இறங்கி வந்து விடுங்கள். இருட்டில் மலை இறங்குவது கஷ்டம் என்றும் கூறியிருந்தார். அண்ணாமலையார் கோவில் மலை என்பது 2668 அடி உயரம் கொண்டது. இங்கு கார்த்திகை தீபம் பண்டிகை காலத்தில் மட்டுமே குறிப்பிட்ட மக்கள் மட்டுமே மலை ஏறிச் செல்லவும் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றவும் அனுமதி இல்லை.

- Advertisement -

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலை மீது செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. இந்த மலை முழுக்க முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் வர மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் அண்ணாமலையார் மலை மீது ஏறியது வனத்துறை தடையை மீறிய குற்றச் செயலாகும்.

நடிகை அர்ச்சனா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த திருவண்ணாமலை வனத்துறை அதிகாரிகள் அந்த புகைப்பட பதிவுகளை வலைதள பக்கத்தில் உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். மலை உச்சிக்கு தடையை மீறிச் சென்ற நடிகை அர்ச்சனா மற்றும் நடிகர் அருண் பிரசாத் இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மாவட்ட வன அலுவலர் சுதாகர் இனிமேல் இதுபோன்ற விதிமீறலை செய்யக்கூடாது என்றும் அவர்களை எச்சரித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்