- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 ஷூட்டிங் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… அடுத்து அந்த சம்பவமும் நடக்கப் போகுதாம் -...

ஜெயிலர் 2 ஷூட்டிங் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… அடுத்து அந்த சம்பவமும் நடக்கப் போகுதாம் – போடு வெடிய, உற்சாகமான ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வந்தார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற சனிக்கிழமை 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் முவீஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. பிறகு அவர் சொன்ன கதை பிடிக்காததால் வேறு இயக்குனரை தேடிய நிலையில் இப்போது நெல்சன்தான் அந்த படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் கமலுடன் இணைந்து அவர் நிறைய படங்களில் நடித்தார். பிறகு கமல்ஹாசன் சொன்ன ஆலோசனைப்படி ரஜினியும் கமலும் தனித்தனியாக நடிக்க துவங்கி விட்டனர். 35 40 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.

ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் பிரமோ ஷூட்டிங் அடுத்த பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. இதற்காக சன் ஸ்டுடியோஸில் மிகப்பெரிய ஷெட் அமைக்கப்பட்டு அங்கு பிரமோ ஷூட்டிங் நடத்தப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் இருவரும் அங்கு சில முக்கியமான காட்சிகளில் நடிக்க உள்ளனர். இந்த பிரமோ காட்சி ரிலீஸ் குறித்த அறிவிப்பு பிறகு வெளியாகும்.

- Advertisement -

ஆனால் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இப்போதைக்கு துவங்காது. இப்போது ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் தான் நடிக்க உள்ளார். அதன்பிறகுதான் கமல் ரஜினி இணைந்து நடிக்க உள்ளனர். அதற்கு முன்பே இந்த பிரமோ ஷூட் அவசரமாக எடுக்க காரணம், ஓடிடி நிறுவனங்கள்தான்.

இந்த படத்தை வாங்கிக்கொள்ள ஓடிடி நிறுவனங்கள் தரப்பில் துண்டு விரித்த நிலையில் அதற்காக முன்பே பிரமோ ஷூட்டிங் நடத்தி அடுத்த 2027ம் ஆண்டில் இந்த படம் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் கமல்ஹாசனும் இனி சட்டசபை தேர்தலில் பிஸியாகி விடுவார் என்பதால் வரும் பிப்ரவரியில் இந்த பிரமோ ஷூட்டை முடித்துவிட இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்