- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கிய நடிகர் கமல்ஹாசன் - இதுதான் காரணமா? வெளிச்சத்துக்கு...

ரஜினி படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கிய நடிகர் கமல்ஹாசன் – இதுதான் காரணமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் பல படங்களை தயாரித்து வருகிறார். அவர் நடித்த படங்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்களின் படங்களையும் அவர் தயாரிக்கிறார்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் படத்தை தயாரித்தது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான். அதே போல் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை தயாரித்ததும் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173 படத்தை நடிகர் கமல்ஹாசனின் சொந்த நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் சொந்தமாக தயாரிக்கிறது. டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்‌ஷனில் உருவாகும் இந்த படத்தில் சாய் பல்லவி ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இதற்கிடையே நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தின் பிரமோ ஷூட்டிங் வருகிற பிப்ரவரி மாதம் சன் ஸ்டுடியோவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

ஆனால் இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மட்டுமே தயாரிக்க உள்ளது. முதலில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உடன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அதில் இருந்து நடிகர் கமல்ஹாசன் பின்வாங்கிய நிலையில் இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்றால் கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் தலைவர் 173 என்கிற ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். அத்துடன் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ஒரு படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே சொந்தமாக தயாரிக்கிறது. அதனால் 2 படங்களை ஒரே நேரத்தில் கமல் தயாரிப்பதால் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மட்டுமே தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்