- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் பார்க்க திரைக்கு வராத படத்துக்கு 3 விருதுகளா? காமெடி செய்கிறதா திரைப்பட விருது தேர்வுக்குழு...

ரசிகர்கள் பார்க்க திரைக்கு வராத படத்துக்கு 3 விருதுகளா? காமெடி செய்கிறதா திரைப்பட விருது தேர்வுக்குழு – விளக்கம் சொல்லுங்க என கேட்ட தனுஷ் பட நடிகை!

- Advertisement -

தமிழக அரசு சார்பில் சிறந்த திரைப்படங்கள் சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் முறைப்படி ஆண்டுதோறும் இந்த விழா நடப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருது பட்டியல் தயார் செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்காக அரசு சார்பில் தமிழ் சினிமா திரைப்பட தேர்வுக்குழு ஒன்றும் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த 2020ம் ஆண்டில் உருவான சண்டக்காரி என்ற படத்துக்கு சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர் சிறந்த கலை இயக்குனர் ஆகிய பிரிவுகளில் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர்கள் விமல் ஸ்ரேயா நடித்துள்ள இந்த படம் இதுவரை தியேட்டரிலோ அல்லது ஓடிடி தளத்திலோ வெளியாகவே இல்லை. சண்டைக்காரி படம் மலையாளத்தில் உருவான மை பாஸ் என்ற படத்தின் ரீமேக் படமாகும்.பொதுவாக ரீமேக் படங்களுக்கு தமிழக அரசு விருது அறிவிப்பது இல்லை.

இப்படி திரைக்கும் ஓடிடி தளத்துக்கும் வராத ரசிகர்ககள் பார்க்காத ஒரு ரீமேக் படத்துக்கு தமிழக அரசு 3 விருதுகளைஅறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் திரை துறையினர் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டைக்காரி படத்தின் இயக்குனர் மதன் திரைப்பட விருது தேர்வுக்குழுவில் ஒரு உறுப்பினர் என்பதால் இப்படி 3 விருதுகள் அந்த படத்துக்கு அறிவித்துள்ளதாகவும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து கர்ணன் பட நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலி தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ஒரே ஆண்டில் வெளியான 2 படங்கள் தேசிய விருதுகளை வென்ற போதும் மாநில விருதுகள் எதையும் பெறவில்லை. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படம் 3 தேசிய விருதுகளையும் மண்டேலா திரைப்படம் 2 தேசிய விருதுகளையும் வென்றன.

இந்த 2 படங்களுமே 2020ம் ஆண்டில் வெளியானவை. ஆனால் இந்த 2 படங்களுக்கும் மாநில அரசின் விருதுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். தயவு செய்து விளக்குங்கள் என்று அந்த பதிவில் லட்சுமி பிரியா சந்திரமவுலி கூறியிருக்கிறார். திரைக்கு வராத ஒரு படத்துக்கு 3 விருதுகளை அறிவித்த திரைப்பட தேர்வுக்குழுவின் செயல் காமெடியாக உள்ளது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்