- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென கை மாறிய சிவகார்த்திகேயன் படம்.. கமல்ஹாசன் எடுத்த முக்கிய முடிவு, வரும் 17ம்...

திடீரென கை மாறிய சிவகார்த்திகேயன் படம்.. கமல்ஹாசன் எடுத்த முக்கிய முடிவு, வரும் 17ம் தேதி இப்படி ஒரு அப்டேட்டா? எஸ்கேவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனுக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல ஒரு பாண்டிங் இருந்து வருகிறது. அதனால்தான் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை நடிகர் கமல்ஹாசனே சொந்தமாக தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கமல்ஹாசனுக்கு பெற்றுத் தந்தது.

முன்பு தனது படங்களை மட்டுமே தயாரிக்க ஆர்வம் காட்டிய நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக மற்ற ஹீரோக்களின் படங்களை தயாரிக்கவும் முன்வருகிறார். அந்த வகையில் இப்போது டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தையும் கமல்ஹாசன்தான் தயாரிக்க உள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியானது. இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும் வியாபார ரீதியாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த படமாக பராசக்தி படம் இருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயனும் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். எஸ்கே புரடக்சன்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார். அவர் இப்போது தாய்கிழவி என்ற படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த படத்தில் கதையின் நாயகியாக மூதாட்டி கேரக்டரில் நடிகை ராதிகா சரத்குமார் மிக சிறப்பாக நடித்துள்ளார்.

- Advertisement -

தாய்கிழவி படத்தை சமீபத்தில் பார்த்த சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசனை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கே தந்து விட்டார். இதனால் அவர் அடுத்து நடிக்க இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டைரக்டர் வெங்கட்பிரபுவின் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரிக்க முன்வந்தார். ஆனால் இப்போது அந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாளை இந்த படத்தின் பிரமோ ஷூட் துவங்குகிறது. வருகிற 17ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள். அன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த படத்தின் பிரமோ டீசரை வெளியிட உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்