- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய ஹீரோக்கள் படத்தை கண்டுகொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் - இந்த படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா?...

பெரிய ஹீரோக்கள் படத்தை கண்டுகொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் – இந்த படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா? – ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

முன்பெல்லாம் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டம்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானித்தது. அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாரின் லாபத்தை தீர்மானித்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. ஓடிடி தளங்கள், சாட்டிலைட் நிறுவனங்களை நம்பிதான் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கும் நிலை உள்ளது.

ஏனெனில் சாட்டிலைட் ஓடிடி வணிகம்தான் தயாரிப்பாளரின் 60 முதல் 70 சதவீத முதலீட்டை திருப்பித் தருகிறது. அதனால்தான் பல படங்கள் ஓடிடி சாட்டிலைட் வணிகம் நடக்காமல் பல மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. சமீபகாலமாக படங்களுக்கான விலையை கணிசமாக ஓடிடி நிறுவனங்கள் குறைத்து விட்டன.

- Advertisement -

மேலும் தொடர் தோல்விகளை தரும் நடிகர்களின் படங்களை விலை கொடுத்து வாங்கவும் மறுக்கின்றன. இதனால் சூர்யா கார்த்தி விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்களின் படங்களே திரைக்கு வராமல் இன்னும் அப்படி தேங்கியுள்ளன. ஆனால் புதுமுக இளம் இயக்குனர் நடிகர் கென் கருணாஸ் நடித்த படத்துக்கு ஓடிடி சாட்டிலைட் நிறுவனங்கள் பலத்த ஆதரவை தந்துள்ளன.

காமெடி நடிகர் கருணாஸ். அவரது மகன்தான் கென் கருணாஸ். இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய அசுரன் விடுதலை 2 படங்களில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இவர் முதன் முறையாக இயக்கிய படம் யூத். இந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சிறை படத்தில் நடித்த நடிகை அனீஸ்மா தான் இந்த படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் யூத் படத்தில் தேவதர்ஷினி ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை பார்வதா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள பெரிய நடிகர்களின் படங்களே ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் விற்பதில் சிக்கல் நீடிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் யூத் படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் ஆகியவை கணிசமான லாபத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் யூத் படக்குழுவினர், தயாரிப்பு நிறுவனத்தினர் பலத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்