- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் மொத்த பட்ஜெட் - திடீரென எகிறிய ரஜினியின் சம்பளம்…...

ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் மொத்த பட்ஜெட் – திடீரென எகிறிய ரஜினியின் சம்பளம்… தயாரிப்பு நிறுவனம் போடும் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

கடந்த 1980களில் நடிகர்கள் ரஜினி கமலும் இணைந்து நடித்த பல படங்கள் வெள்ளிவிழா படங்களாக வெற்றிவிழா கொண்டாடின. ஆனால் தங்களது தனிப்பட்ட வளர்ச்சியை கவனத்தில் கொண்டு இருவரும் இனி தனித் தனியாகவே நாம் நடிப்போம் என்ற முக்கிய முடிவுக்கு வந்து அதை கடந்த 40 ஆண்டுகளாக இருவரும் கடைபிடித்து தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடினர்.

தமிழ் சினிமாவில் இரண்டு சிகரங்களாக உயர்ந்திருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் அடுத்து ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இது ரஜினி 174 கமல் 237 என்று தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் இந்த படத்தை டைரக்ட செய்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரூ. 150 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் ரஜினிகாந்த் இப்போது கமலுடன் நடிக்கும் படத்துக்கு ரூ. 225 கோடி சம்பளம் வாங்குவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது தனது சம்பளத்தில் திடீரென 75 கோடி ரூபாய் ரஜினிகாந்த் உயர்த்தியிருக்கிறார். கமல்ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் அவரும் சம்பளத்தை உயர்த்தினாரா என்ற தகவல் வரும் நாட்களில் தெரிய வரலாம்.

வரும் ஏப்ரலில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. ரஜினி கமல் சம்பளமே ரூ. 375 கோடிக்கு மேல் வந்த நிலையில் இயக்குனர் இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர் படத்தின் நாயகிகள் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் மேக்கிங் செலவு உள்பட இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடியை கடந்துவிடும் எ்னறு சொல்லப்படுகிறது.

- Advertisement -

எனினும் பான் இந்தியா படம் என்பதால் சேட்டிலைட் உரிமம் டிஜிட்டல் உரிமம் மற்றும் ஆடியோ ரைட்ஸ் போன்றவற்றால் இந்த படத்தின் நான் தியேட்டரிக்கல் பிஸினஸ் மூலமே ரூ. 300 கோடி வரை வசூலித்து விடலாம். தியேட்டர் வசூலும் கணிசமாக இருந்தால் இந்த படம் தான் தமிழ் சினிமாவில் ரூ. 1000 கோடி வசூலித்த முதல் படமாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் ஒரு திட்டம் வகுத்துள்ளது.

நடிகர் விஜயை விட அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் தனது சம்பளத்தை ரூ. 225 கோடியாக உயர்த்தியதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்துக்காக ரூ. 220 கோடி சம்பளம் வாங்கியதால் அதை விட ரூ. 5 கோடி சம்பளம் அதிகமாக ரூ. 225 கோடியை தனது சம்பளமாக ரஜினி நிர்ணயித்து விட்டார் என்றும் கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்