தமிழ் சினிமாவில் ஹீரோ நடிகர்கள் தொடர்ந்து பல படங்களில் நடிக்கின்றனர். சில படங்கள் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் வெற்றிப் படங்களை கொடுத்து தொடர்ந்து ஹீரோவாக ரசிகர்களின் மத்தியில் வலம் வருகின்றனர். ஆனால் நடிகைகள் அப்படியல்ல. ஒரு காலகட்டத்தில் திருமணம் குடும்பம் கணவன் பிள்ளைகள் என சினிமாவை விட்டு காணாமல் போய் விடுகின்றனர்.
ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்கின்றனர். ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போனாலும் அக்கா அண்ணி சித்தி அத்தை அல்லது ஏதேனும் அரசு அதிகாரி கேரக்டரில் கூட நடிக்கின்றனர். சில நடிகைகள் டிவி சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடிக்க வந்துவிடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கவர்ச்சி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. சுந்தர் சி இயக்கிய முதல் படம் உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரம்பா அறிமுகமானார். அதில் நடிகர் கார்த்திக் ஜோடியாக ரம்பா நடித்தார். இந்த படத்தில் வரும் அழகிய லைலா அது இவளது ஸ்டைலா என்ற பாடலை ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அதன்பிறகு தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ரம்பா தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சிரஞ்சீவி வெங்கடேஷ் போன்ற நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். நடிகை ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பட்டப் பெயர் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் ரம்பா திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ரம்பா தற்போது கனடாவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். சுமார் 16 ஆண்டுகளாக சினிமாவை விட்டு முற்றிலும் விலகியிருந்த ரம்பா அவ்வப்போது டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ களில் கலந்துக்கொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தருகிறார்.
மீண்டும் திரையில் பழைய தோற்றத்தில் காட்சியளிக்க உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு கடைப்பிடித்து ஸ்லிம் ஆக ரம்பா மாறியிருக்கிறார். மேலும் சில இயக்குனர்களிடம் கதைகள் கேட்டுள்ளார். அதில் 2 கதைகளை அவர் தேர்வு செய்துள்ளதால் விரைவில் அந்த படங்களில் ரம்பா நடிக்க உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வெளியான பெண் சிங்கம் தான் ரம்பா கடைசியாக நடித்த படம். அதனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 49 வயதில் ரம்பா மீண்டும் நடிக்கிறார்.





