- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது விஷால் படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் இயக்குனரின் அந்தத் திரைப்படமும் விரைவில் வெளியாகப் போகிறதா... தமிழ்...

என்னது விஷால் படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் இயக்குனரின் அந்தத் திரைப்படமும் விரைவில் வெளியாகப் போகிறதா… தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம்தான் போங்க…

- Advertisement -

பொங்கல் தினத்திற்கு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, தயாரிப்பு நிறுவனமான லைக்கா, விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று கூறி அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் ஏகே ரசிகர்கள் நொந்து போனார்கள்.

 

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, பொங்கல் ரேசில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் வெளியேறியதால் சிறுசிறு திரைப்படங்கள் அனைத்தும், ரிலீசுக்கு தயாராகி விட்டன. ஒட்டுமொத்தமாக பத்து திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது விஷாலின் மதகஜராஜா திரைப்படம் வெளியாவது தான்.

 

- Advertisement -

2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, பெட்டிக்குள் முடங்கி கிடந்தது. தற்போது, பதினோரு ஆண்டுகள் கழித்து மதகஜராஜா திரையரங்குகளை எட்டிப் பார்க்கிறது. சுந்தர் சி இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அவரது இயக்கத்தில் வெளியே வந்த பெரும்பாலான திரைப்படங்கள், முழுக்க முழுக்க கமர்சியல் ரகத்தில் இருப்பதால் இந்த திரைப்படம் நிச்சயமாக பொங்கல் ரேசில் முந்திச் செல்லும் என்று பலரும் ஆருடம் தெரிவித்து வருகிறார்கள். போதாக்குறைக்கு சந்தானமும் படத்தில் இருப்பது வசூலுக்கு வலு சேர்க்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி எடுத்துள்ள திரைப்படமும் பிப்ரவரி அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் சசி. சொல்லாமலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தனது முதல் திரைப்படத்திலேயே தான் யார் என்று நிரூபித்தார். ரோஜா கூட்டம், பூ என அவரது வெற்றி திரைப்படங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். குறிப்பாக விஜய் ஆண்டனி நடித்த, பிச்சைக்காரன் திரைப்படம் சசிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

 

இந்த நிலையில் அவர் 2022 ஆம் ஆண்டு, ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி ஆகியோரை வைத்து நூறு கோடி வானவில் என்னும் திரைப்படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டது. இதன் டீசரும் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படியான சூழலில் தான், அந்தத் திரைப்படம் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்