- Advertisement -
Homeபொழுதுபோக்குமத சார்பின்மையை கெடுக்கும் சமூக அச்சுறுத்தலான அந்த படத்தை உடனே தடை செய்க - ...

மத சார்பின்மையை கெடுக்கும் சமூக அச்சுறுத்தலான அந்த படத்தை உடனே தடை செய்க – கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆவேசம்!

- Advertisement -

இப்போதெல்லாம் சில படங்கள் மக்களின் பொழுபோக்குக்காக எடுக்கப்படுகிறதா, அல்லது மக்களிடையே பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சையான படங்கள் உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்து விடுகிறது. சில படங்கள் தவறான உள்நோக்கத்துடன் சமூகத்தின் பார்வையில் கேடு விளைவிக்கும் அம்சத்தில் திரைக்கு கொண்டு வரப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

கடந்த 2023ம் ஆண்டில் இயக்குனர் சுதீப்தோ சென் டைரக்‌ஷனில் வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தது. இந்த படத்தில் அதாஷர்மா முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சுதீப் தோசென்னுக்கு மத்திய அரசின் சிறந்த இயக்குனர் தேசிய விருதும் பெற்றார்.

- Advertisement -

முதல் பாகத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது தி கேரளா ஸ்டோரி 2 என்ற டைட்டிலில் அந்த படம் 2ம் பாகமாக உருவாகியுள்ளது. இந்த 2ம் பாகம் படத்தை இயக்குனர் காமாக்யா நாராயண் சிங் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் உல்கா குப்தா ஐஸ்வர்யா ஓஜா அதிதி பாத்தியா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

தி கேரளா ஸ்டோரி2 படம் வரும் 27ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கேரளா ஸ்டோரி 2 படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கேரளா மாநிலமுதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பினராயி விஜயன் அதில் கூறியிருப்பதாவது, தி கேரளா ஸ்டோரி 2 சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நிறைந்த ஒரு படமாகும். முதல் பாகம் கேரள அரசுக்கு எதிராக வெறுப்பை பரப்பி மதச்சார்பின்மையை கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டு இருந்தது. பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் திருமணங்களை கட்டாய மதமாற்றத்திற்கு உதாரணமாக சித்தரித்து படத்தில் காட்டப்பட்டுள்ளது.

எனவே தி கேரளா ஸ்டோரி 2 படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக அவலங்களை தோலுரித்து காட்டுகிறேன் என்ற பெயரில் மக்கள் மத்தியில் தேவையற்ற மதம் சார்ந்த உணர்வுகளை பரப்பும் தவறான எண்ணங்களை தூண்டும் படங்கள் வருவதை தடுக்க சென்சார் போர்டு தான் பாதுகாப்பு கேடயமாக முதலில் இருந்து தடுக்க வேண்டும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்