நடிகர் விஜய் ஆண்டனிக்கு கடந்த ஆண்டு பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியானது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்ததால், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனை விஜய் ஆண்டனியே தயாரித்து இருந்தார்.
ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லை. விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவிட்டாலும், வசூலில் ஓரளவு பேசப்பட்டது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரத்தம் என்னும் படத்தில் அவர் நடித்திருந்தார்.
தமிழ் படம், தமிழ் படம் 2 ஆகிய படங்களை எடுத்து சி எஸ் அமுதன் இந்த படத்தை இயக்கியிருந்தார். எப்போதும் நகைச்சுவை பாணியில் படம் எடுக்கும் அவர் இந்த திரைப்படத்தில் கொஞ்சம் சீரியஸ் காட்டி இருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இப்படியான சூழலில் ரோமியோ என்னும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். அந்தப் படத்தை தயாரிக்கவும் அவர் செய்துள்ளார். இதில் மிருணாளி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட வரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் போஸ்டரில், முதல் இரவு அன்று விஜய் ஆண்டனி கையில் பால் சொம்பை வைத்திருப்பது போலவும், கதாநாயகி மது குடிப்பது போலவும் காட்சி இடம் பெற்று இருந்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், ஆண் பெண் என இருவரும் மது குடிப்பது தவறு. அதை நான் ஆதரிக்கவில்லை. அந்த காலத்தில் திராட்சை ரசம் இருந்தது அதை இயேசு கூட குடிச்சி இருக்காரு ஒவ்வொரு காலகட்டத்திலும் மது வேறு வேறு பெயரில் இருந்தது என்று பேசியிருந்தார்.
இப்படியான சூழலில், ஜீசஸ் குறித்து பேசியதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பினருக்கு வணக்கம் என்று ஆரம்பித்துள்ள அவர், நான் பேசியதை தவறாக அர்த்தம் படுத்தியதால் சிலர் புண்பட்டிருந்தீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது என்று கூறியிருக்கிறார். கிறிஸ்தவ சபை கண்டனம் தெரிவித்துள்ள சூழலில் இதற்கான விளக்கத்தை அவர் அளித்து இருப்பது தெரியவந்துள்ளது.





