சமீபத்தில் நடைபெற்ற “ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காகா கதை பல சர்ச்சைகளை உண்டு செய்தது. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடும் நடிகர்களை குறித்து அவர் பொதுவாக அவ்வாறு பேசினார் என்று எடுத்துக்கொண்டாலும், ரஜினிகாந்த் விஜய்யை குறித்துதான் அவ்வாறு பேசினார் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.

இவ்வாறு ரஜினிகாந்த் விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் குஷியாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் குஷிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு டீகோடிங்கை செய்துள்ளார்.
“ஜெயிலர்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்க தொடங்கினேன். அவ்வாறுதான் நெல்சன் என்னிடம் ஒரு கதையை கூறினார். அந்த கதை பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டேன். அந்த சமயத்தில் நிறைய இளம் இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்ல காத்திருந்தனர்.

அவர்களை எல்லாம் காக்க வைக்க கூடாது என்பதற்காக ஜெயிலர் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுவிட்டேன். அதன் பின் பீஸ்ட் படம் வெளியாகி சுமாரான ரிவ்யூக்களே வந்தது. ஆதலால் பல விநியோகஸ்தர்கள் நெல்சன் படத்தில் இருந்து விலகிவிடுங்கள் என கூறினார்கள். ஆனால் ஒரு இயக்குனரை கமிட் செய்துவிட்டு அதன் பின் வேண்டாம் என்று கூறினால் அந்த இயக்குனரின் வாழ்க்கை வீணாகிவிடும்” என்று கூறினார்.

அதாவது விக்னேஷ் சிவனுக்கு ஓகே சொன்ன அஜித், அதன் பின் அவரை கழட்டிவிட்டுவிட்டார். அதனை குத்திக்காட்டவே இவ்வாறு ரஜினிகாந்த் பேசியதாக மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார்.





