- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 மணிக்கே சொல்லிடுவாங்க… அதை எல்லாம் நம்பாதீங்க… இட்லி கடை பட விழாவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள்...

8 மணிக்கே சொல்லிடுவாங்க… அதை எல்லாம் நம்பாதீங்க… இட்லி கடை பட விழாவில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த இயக்குனர் தனுஷ்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் குபேரா படத்தை தொடர்ந்து வருகிற அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் தனுஷ்தான். அவரே டைரக்ட் செய்து இந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 3 படங்களை இயக்கிய நடிகர் தனுஷ் இயக்கிய 4வது படம் இட்லி கடை. திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு மீண்டும் நடிகை நித்யா மேனன் இதில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் சத்யராஜ் பார்த்திபன் அருண் விஜய் கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோவையில் உள்ள மால் ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சத்யராஜ், தனுஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் ஆசை இட்லி கடை படத்தில் நிறைவேறி விட்டது. அவருடன் நடிப்பது மட்டுமின்றி அவரது இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பாகவும் அது அமைந்து விட்டது, என்றார்.

நடிகர் பார்த்தின் இந்த விழாவில் பேசுகையில், விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஜெயம் உங்களுக்கு தான். வருகிற 2026ம் ஆண்டில் நான்தான் சிஎம் என்று அவருக்கே உரிய குறும்பான பாணியில் பேசி ரசிகர்களிடம் பலத்த கைதட்டலை பெற்றார். இட்லி கடை படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் பார்த்திபன் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த விழாவில் படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் தனுஷ் கலந்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, 9 மணிக்கு படம் என்றால் 8 மணிக்கே சில ரிவ்யூக்கள் வர ஆரம்பித்து விடும். அதை எல்லாம் நம்பிடாதீங்க. 9 மணிக்கு படம் ரிலீஸாகி 12.30 மணிக்குதான் படம் எப்படி இருக்குது என்பதே தெரிய வரும்.

அதனால் சரியான ரிவ்யூக்களை பார்த்து படம் எப்படி இருக்குது என்று ரசிகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்க என்று நடிகர் தனுஷ் பேசி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையே இட்லி கடை டிரெய்லர் பார்த்த பலரும் இது மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை கதை. அதை தான் தனுஷ் ராஜ்கிரண் அப்பாவாகவும் அவர் மகனாகவும் எடுத்து வைத்திருக்கிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்