- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென பின்வாங்கிய மும்பை தயாரிப்பு நிறுவனம்… மீண்டும் சிக்கலில் ஏகே 64 படம் - படப்பிடிப்பு...

திடீரென பின்வாங்கிய மும்பை தயாரிப்பு நிறுவனம்… மீண்டும் சிக்கலில் ஏகே 64 படம் – படப்பிடிப்பு துவங்கும் அறிகுறி கண்ணுக்கு எட்டிய வரை தெரியலே…?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடைசியாக நடித்த படம் குட் பேட் அக்லி. இந்த படம் கடந்தாண்டில் வெளியானது. ஆனால் இது முந்தைய ஆண்டில் எடுக்கப்பட்ட படம்தான். கடந்தாண்டு முழுவதும் அஜீத்குமார் எந்த படத்திலும் நடிக்காமல் கார் ரேஸில் முழு கவனம் செலுத்தினார். அதனால் ஏகே 64 ஷூட்டிங் நடக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் ஏகே 64 படப்பிடிப்பு துவங்கி விடும் என்று படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு முழுவதும் இந்த படத்தை தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்களுடன் அஜீத்குமார் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணம் அஜீத்குமார் சம்பளம் ரூ. 185 கோடி கேட்பதுதான். அந்த அளவுக்கு பெரிய சம்பளம் கொடுத்து ரூ. 300 கோடி முதல் ரூ.350 கோடி வரை முதலீடு போட்டு படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வருவதில்லை. காரணம், அஜீத்குமார் படத்துக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் நிலவரம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இந்த சூழலில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் லைகா புரடக்சன்ஸ் சத்யஜோதி பிலிம்ஸ் சன் பிக்சர்ஸ் என பல தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசியும் எந்த நிறுவனமும் முன்வராத நிலையில் மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்தது. இதில் ரூ. 100 கோடி சம்பளம், குறிப்பிட்ட சதவீதம் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் இந்த படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது பென் மீடியா அந்த முடிவில் இருந்து திடீரென பின்வாங்கி விட்டது. இப்போதைய கோலிவுட் நிலவரப்பட்டி நடிகர் அஜீத்குமார் நடித்த படங்களின் வியாபாரம் ரூ. 225 கோடிக்கு மேல் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில், அதில் 100 கோடி ரூபாய்க்கு அஜீத்குமார் சம்பளம் என்ற நிலையில் மும்பை நிறுவனம் பின்வாங்கி விட்டது.

அதன்பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் தரப்பிலும் சரியானபடி ரியாக்சன் இல்லை. எனவே ஏகே 64 படம் ஷூட்டிங் பிப்ரவரியில் துவங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இன்னும் சில மாதங்களுக்கு இந்த படம் ஷூட்டிங் தள்ளிப் போகும். தயாரிப்பாளர் யாரும் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வராததால் ஏகே 64 படப்பிடிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்