- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகவதர் கால படம் பார்க்க ஆசையா? அப்போ த ஓடிசி பார்க்க கிளம்புங்க - இயக்குனர்...

பாகவதர் கால படம் பார்க்க ஆசையா? அப்போ த ஓடிசி பார்க்க கிளம்புங்க – இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படத்தை கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

உலக அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இதுவரை அவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானரில் உருவாகியுள்ளது. இப்போது புராண கால கதையை கையில் எடுத்திருக்கிறார் நேற்று உலகம் முழுவதும் த ஒடிசி படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு இந்தியாவிலும் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்நிலையில் த ஒடிசி படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, போருக்காக ட்ராய் நாட்டுக்கு செல்லும் வீரன் 20 ஆண்டுகளாக திரும்பவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று இங்கே இருக்கும் ராணியிடம் சொல்கிறார்கள். ஆனால் ராணி நம்பிக்கையுடன் இருக்கிறார். ஒடிசி மன்னர் நாட்டுக்கு திரும்பினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இது ட்ராய் படத்தின் தொடர்ச்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அந்த படம் போர் தொடர்பாக இருக்கும். இது போருக்கு பிறகு ஓடிசி எப்படி சொந்த நாட்டுக்கு வந்தார் என்பது படமாக இருக்கும். இதெல்லாம் ஒரு கதை என்று எப்படி எடுத்தார்கள் என தெரியவில்லை. படத்தில் ஹீரோ என்ன வீரதீர செயல்களை செய்தார் என்பது கதையாக இருந்தால் பரவாயில்லை. இதில் ஹீரோவோ, நான் அடி வாங்காத ஊரே இல்லை என்று இருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் அடிவாங்கி தப்பித்து வருகிறார். முதலில் ஒரு கண் உடையவரிடம் அடி வாங்குகிறார்.

இன்னொரு ஊருக்கு சென்று பீச்சில் கடை போட்டு இருக்கும் அக்காவிடம் இருந்து தப்பிக்கிறார்கள். இன்னொரு ஊரில் 20 அடி உயரத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று அடி வாங்குகிறார்கள். பிறகு எந்நேரமும் சென்று ஒரு பெண்ணுடன் பேசுகிறார். அந்தப் பெண் இந்த ஹீரோவுக்கு தாமரை இலையில் உணவு போட்டு மண்டையை மழுங்கடிக்கிறது. தாமரை எங்கே மலர்ந்தாலும் அங்கே மழுங்கிவிடும் என்பது கூட தெரியவில்லை.

- Advertisement -

இது கிறிஸ்டோபர் நோலனின் படமாச்சே? பயங்கரமான ஒரு போர் படத்தை கொடுக்கப் போகிறார் என்றுதான் நினைத்தோம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தால் விட்டலாச்சாரியா படம் மாதிரி இருக்கிறது. இந்த படத்தின் முழு எஃபெக்டை அடைய மொத்தமே 40 தியேட்டர்கள் தான் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம்னி பஸ்சில் பார்த்தால் கூட அதே எஃபெக்ட் தான் கிடைக்கும். இதை எல்லாம் நோலனுக்கு கம்பேக் என்று சொல்வார்கள். சவுண்ட் டிசைனிங் சூப்பர் என சொல்வார்கள்.

படம் நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்ல மாட்டார்கள். மிஸ் செய்யாமல் இதை ஐ மாக்ஸில் பாருங்கள் என சொல்வார்கள். இது உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன ட்ராமா. அதைத்தான் ரீமேக் செய்து இருக்கிறார் என்று சொல்வார்கள். நம்ம ஊரிலும்தான் பாகவதர் படம் சூப்பராக ஓடியது. எனவே அதனை ரீமேக் செய்ய முடியுமா? அதை பார்ப்பேன் என்று சொல்பவர்கள் தாராளமாக சென்று பாருங்கள் என்று ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்