ஒரு ஹீரோ நடிகர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திர நடிகராக மாறிவிட்டால் அதன் பிறகு தொடர்ந்து 5 படங்கள் 10 படங்கள் என பிளாப் படங்களாக கொடுத்தாலும் அவர்கள் அடுத்து ஒரு ஹிட் படம் கொடுத்தால் மீண்டும் பழைய இடத்துக்கு வந்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த ஹிட் படமே பல பட வாய்ப்புகளை தானாக பெற்றுத் தந்து விடுகிறது.
அதற்கு உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்து வந்த நடிகர் சூர்யா கருப்பு படம் மூலம் மீண்டும் தனது பழைய இடத்துக்கு வந்து விட்டார். கருப்பு படம் அவருக்கு சூப்பர் கம்பேக் கொடுத்தது. ஆனால் அதே நேரத்தில் வளரும் காலகட்டத்தில் உள்ள ஒரு ஹீரோ நடிகர் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கும் பட்சத்தில் அவர்களால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற முடியாது.
அப்படித்தான் பல இளம் நடிகர்கள் தொடர் தோல்வி படங்களை தந்து தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போய் விடுகிறார்கள். அதனால் வளரும் காலகட்டத்தில் நல்ல படங்கள் அமைவது என்பது வளரும் நடிகர்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான வாய்ப்பு தான். அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அறிமுக நடிகர்கள், வளரும் நடிகர்கள் மிக விரைவில் பெரிய நட்சத்திர நடிகராக மாறி உச்சம் தொட்டு விடுகிறார்கள். அந்த வகையில் ஆரம்ப காலத்தில் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுத்த படம் சண்டக்கோழி.
இயக்குனர் லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் ராஜ்கிரண் மீரா ஜாஸ்மின் மலையாள நடிகர் லால் தலைவாசல் விஜய் போன்றவர்களும் படத்தில் நடித்திருந்தனர். நடிகர் விஷாலுக்கு சண்டக்கோழி படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை வரவேற்பை பெற்றுத் தந்தது. சண்டக்கோழி படத்தில் நடிக்க அமைந்த வாய்ப்பு குறித்து நடிகர் விஷால் வெளிப்படையாக பேசியிருக்கிறார்
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால் கூறியதாவது, சண்டக்கோழி படத்தின் கதையை இயக்குனர் லிங்குசாமி நடிகர் விஜய்க்கு தான் முதலில் சொல்லியிருக்கிறார். நான் செல்லமே படத்தை முடித்துவிட்டு அப்போது சும்மா இருந்தேன். இந்த கதையின் லைனை கேள்விப்பட்டதும் லிங்குசாமியிடம் போய் நான் இந்த படத்தை செய்கிறேன் என்று சொன்னேன்.
அப்புறம் தான் இந்த கதை நடிகர் சூர்யாவுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்கு தெரிந்தது. ஆனால் சண்டக்கோழி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. யாருக்கோ எழுதப்பட்ட கதை எனக்கு வந்து சேர்ந்ததுதான் ஆச்சரியம். இப்படி எல்லாம் அமைவது ஒரு நடிகனுக்கு மிகப்பெரிய பாக்கியம் என்று நடிகர் விஷால் அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





