நடிகை மீனா கடந்த 1990களில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நட்சத்திர ஹீரோக்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜீத்குமார் சரத்குமார் சத்யராஜ் பிரபு முரளி கார்த்திக் என பல ஹீரோக்களுக்கு மீனா ஜோடியாக நடித்தார். அப்போது குஷ்பு மீனா ரோஜா ரம்பா நக்மா போன்றவர்களே முன்னணி நாயகியாக தமிழ் சினிமாவில் இருந்தனர்.
இயக்குனர் சேரன் இயக்கிய படங்களில் நடித்த மீனாவுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பாரதி கண்ணம்மா வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் மீனா நாயகியாக நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மீனா கூறியதாவது, வெற்றிக் கொடி கட்டு படம் பண்ணும்போது வேறு ஒரு படத்திலும் நான் நடித்துக்கொண்டு இருந்தேன். அதனால் நான் ஹேர் கலரிங் பண்ணியிருந்தேன். அதை பார்த்ததும் இயக்குனர் சேரனுக்கு அப்படியே ஹார்ட் அட்டாக் வராத ஒரு குறைதான்.
என்னம்மா இப்படி பண்ணீட்டீங்க என்று அவர் பதறிப் போய்விட்டார். என்ன சேரன் பண்றது? இதெல்லாம் சகஜம்தானே? நாம நார்மலா ஜடை போட்டால் இதெல்லாம் திரையில் பெருசா தெரியாது தானே? அவ்வளவு பார்ப்பாங்களா என்ன என்று நான் அவரை சமாதானமாப்படுத்தும் விதமாக சொன்னேன்.
அய்யய்யோ… அவங்க பார்ப்பாங்களா மாட்டாங்களான்னு அதெல்லாம் எனக்கு தெரியாது. இந்த கலர் எனக்கு வேண்டாம். இந்த முடி என் படத்துக்கு வேணாம் என்றார். இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். இதுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறீங்க. நான் பிளாக் கலர் பண்ண மாட்டேன் என்று சேரனிடம் நானும் கோபமாக பேசிவிட்டேன்.
அப்புறம் அவர் ரொம்பவும் ரெக்வெஸ்ட் பண்ணி ஹேர் கலரிங் மாத்துமாறு கூறினார். பிறகு என் அம்மாவும் வேண்டாம்மா, அந்த கேரக்டருக்கு இப்படி ஹேர் ஸ்டைல் இருந்தால் நல்லா இருக்காது. உனக்கே தெரியும் இது நல்லா இல்லேன்னு. அப்புறம் ஏன் இப்படி பண்றே என்றும் சொன்னார். அதனால் அப்போது சொன்ன பேச்சை கேட்காமல் நடந்து கொண்டதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது என்று நடிகை மீனா அதில் கூறியிருக்கிறார்.





