- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு தடைகள் போட்டுட்டே இருக்காங்க… தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன் - நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சுக்கு கண்டனம்...

எனக்கு தடைகள் போட்டுட்டே இருக்காங்க… தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன் – நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சினிமா பிரபலம்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் எஸ்.கே புரடக்சன்ஸ் சார்பில் பவுனுத்தாயி கேரக்டரில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த படம் தாய்க்கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவக்குமார் முருகேசன் டைரக்ட் செய்திருக்கிறார். தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, தாய்கிழவி படத்தை ராதிகா மேடத்தை தவிர வேறு யாரும் பண்ண முடியாது. படப்பிடிப்பில் ராதிகாவுக்கு மூட்டு வலி இருந்தது. ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் மற்ற நடிகர்கள் கால்ஷீட் இல்லை. அதை புரிந்துகொண்டு அவர் நடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

என்னுடைய இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆசைப்படுகிறேன். இந்தப் பெயர் பணம் புகழ் எனக்கு மட்டும் கடவுள் கொடுக்கவில்லை. அதை மற்றவர்களுக்கும் பயன்படுத்தணும் என்று நினைக்கிறேன். அதை நான் பண்ணீட்டும் இருக்கிறேன். அதற்காகவே இந்த படங்களை பண்ணுகிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி போகவோ அட்டாக் பண்ணவோ காலி பண்ணவோ வரவில்லை.

நான் ரீமேக் படங்கள் பண்ணுவதில்லை. கதை கேட்டு தான் பண்ணுகிறேன். என் மைனஸ்களை பிளஸ் ஆக்க நினைக்கிறேன். இண்டஸ்ட்ரியில் சிலர் ஏதாவது தடைகள் போட்டுக்கிட்டே இருக்காங்க. அதை தாண்டி வர நான் ரெடி. அதை நீக்கிவிட்டால் பல இயக்குனர்களை உருவாக்குவேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசியிருந்தார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் இப்படி பேசியது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் கடும் விமர்சனம் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி பிஸ்மி கூறியதாவது, படங்களில் நடிக்க வாய்ப்பே இல்லாத ஒரு நடிகர் இப்படி பேசினால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மற்ற நடிகர்களை விட உயரத்தில் இருக்கிறார். சீனியர் நடிகர்கள் சூர்யா சிம்பு தனுஷ் ஆகியோரை விட அதிக சம்பளம் பெற்று வருகிறார். இப்படி இருக்கும் போது ரசிகர்களிடம் சிம்ப்பதி கிரியேட் செய்வதற்காக இப்படி எல்லாம் அவர் மேடையில் என்னை முடக்கறாங்க, என்னை தடுக்கறாங்க என்று பேசுவது அபத்தமாக உள்ளது. பராசக்தி படம் ஓடாததற்கும் மதராஸி படம் ஓடாததற்கும் இப்படி முடக்கியதுதான் காரணமா என்று பிஸ்மி அந்த வீடியோவில் கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்