- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது சம்பளம் ரூ. 6 கோடியை விட்டுத் தந்த நடிகை தமன்னா… 12 நாட்கள் இலவசமாக...

தனது சம்பளம் ரூ. 6 கோடியை விட்டுத் தந்த நடிகை தமன்னா… 12 நாட்கள் இலவசமாக நடித்தது ஏன்? ஹீரோ… டைரக்டர் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வியாபாரி படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்தார். கல்லூரி மாணவியாக அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பையா தோழா சுறா அயன் படிக்காதவன் வேங்கை வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அடையாளத்தை பெற்று முன்னணி நடிகையாக மாறினார். ராஜமவுலி இயக்கத்தில் உருவான பிரமாண்ட படைப்பான பாகுபலி படத்தில் 2 நாயகிகளில் ஒருவராகவும் தமன்னா இருந்தார்.

- Advertisement -

இப்போது இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை தமன்னா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சிறப்பு பாடல் காட்சி நடனங்களிலும் அதிகமாக ஆடி வருகிறார். இதற்காக அவர் ரூ. 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். படங்களில் நடிக்கவும் ரூ. 6 கோடி வரை நடிகை தமன்னா சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு இந்தி திரைப்படம் ஓ ரோமியோ விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் மாஸ்சி நாயகனாகவும் தமன்னா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை டைரக்டர் விஷால் பரத்வாஜ் இயக்கி உள்ளார். ஓ ரோமியோ படத்தில் சாஹித் கபூர் திருப்தி திம்ரி நானா படேகர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

ஓ ரோமியோ இந்தி படத்தில் நடித்ததற்காக நடிகர் விக்ராந்த் மாஸ்சி நடிகை தமன்னா சம்பளம் வாங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த படத்துக்காக ரூ. 6 கோடி சம்பளத்தை நடிகை தமன்னா விட்டு தந்துள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் விஷால் பரத்வாஜ் சம்பளம் வாங்காமல் இயக்குனராக படத்தில் பணி செய்திருக்கிறார். நடிகை தமன்னா 12 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

முன்னதாக ஓ ரோமியோ படத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளிம் தமன்னா பங்கேற்றார். ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகை தமன்னா, இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. தனது பிஸியான ஷெட்யூலிலும் 12 நாட்கள் ஒதுக்கி கொஐத்து நடித்தும் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் பாலிவுட்டில் சினிமாவில் ஆச்சரியத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்