- Advertisement -
Homeபொழுதுபோக்குவிவகாரத்து மனுவில் புகார்களை அடுக்கிய சங்கீதா - வரும் ஏப்ரல் 20ம் தேதி நடிகர் விஜய்...

விவகாரத்து மனுவில் புகார்களை அடுக்கிய சங்கீதா – வரும் ஏப்ரல் 20ம் தேதி நடிகர் விஜய் கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு!

- Advertisement -

இதுவரை நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த பல விஷயங்கள் நேற்று அவரது மனைவி சங்கீதா வாயிலாக அவை அனைத்தும் உண்மைதான் என்று வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. செங்கல்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்த சங்கீதா, விஜய் குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

கடந்த 1999ம் ஆண்டு விஜய் – சங்கீதா திருமணம் நடந்த நிலையில் ஜேசன் சஞசய் என்ற மகன் திவ்யா சாஷா என்ற மகள் உள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த மனுவில் சங்கீதா கூறியிருப்பதாவது, நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது 2021 ஏப்ரல் மாதம் எனக்கு தெரிய வந்தது. நான் கண்டுபிடித்த பிறகும் அந்த நடிகையுடன் உறவை விஜய் தொடர்ந்து வந்தார். நான் கண்டுபிடித்த பிறகு நடிகையுடன் இருந்த உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தார்.

ஆனால் அந்த நடிகையுடன் உறவை விஜய் தொடர்ந்ததால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நடிகையுடன் அவரது உறவை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை விஜய் தொடர்ந்தார். 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் மனதளவிலும் உணர்வு பூர்வமாகவும் விஜய் என்னைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

விஜயின் தவறான உறவால் 2021ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம். எனது கணவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். என் கணவருடன் வெளிநாடுகளுக்கு செல்லும் நடிகை இருவரும் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கு அவமானத்தை தருகிறது. இதனால் என் குழந்தைகளும் நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். மேலும் என் கணவர் என்னுடன் தாம்பத்திய உறவை தவித்தார் என்று பலவிதமான குற்றச்சாட்டுகளை விஜய் மீது சங்கீதா கூறியிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, வருகிற ஏப்ரல் 20ம் தேதி நடக்கும் விசாரணைக்கு நடிகர் விஜய் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்