தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் விஜயசாந்தி. முதன் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் அவர்தான். பிறகுதான் அந்த படம் நடிகை நயன்தாராவுக்கு மாறியது. ஆனால் தெலுங்கில் ஆக்சன் படங்களில் அதிரடி சண்டை காட்சிகளில் அவர் அசத்தியதால் அந்த பட்டம் அவருக்கு கிடைத்தது.
தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்துதான் விஜயசாந்தி சினிமாவில் அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் வைஜெயந்தி ஐபிஎஸ் இந்திரன் சந்திரன் மன்னன் தடயம் ராஜஸ்தான் ராஜாங்கம் நெஞ்சில் துணிவிருந்தால் எங்கடா உங்க எம்எல்ஏ என பல படங்களில் நடித்தார்.
தெலுங்கில் சிரஞ்சீவி நாகர்ஜூனா வெங்கடேஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த விஜயசாந்தி தமிழில் பி வாசு இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக மன்னன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினியை எதிர்க்கும் ஒரு மனைவியாக அவரது நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றது.
சினிமாவில் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்த நடிகை விஜயசாந்தி தெலுங்கு அரசியலில் களம் புகுந்தார். எம்பியாகவும் பதவி வகித்தார். சினிமாவில் நடித்த வகையில் விஜயசாந்தி பல விருதுகளை பெற்றிருக்கிறார். சில படங்களை அவர் சொந்தமாகவும் தயாரித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக விஜயசாந்தி சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1990களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்த லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி அப்போது வாங்கிய சம்பளம் ரூ. 1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோக்களே 30 லட்சம் 40 லட்சம் ரூபாய் என சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நிலையில் கதாநாயகியாக ஒரு படத்தில் நடிக்க அவர் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை விஜயசாந்தி கூறியதாவது, நடிகர்களே 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்காத போது இந்திய சினிமாவில் முதன்முதலில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை நான்தான். உண்மையிலேயே அப்போ அது ரொம்ப ஜாஸ்திதான். இது மற்ற நடிகைகளுக்கு மட்டுமல்ல. நடிகர்களுக்கே அந்த சமயம் பொறாமையாக தான் இருந்திருக்கும் என்று நடிகை விஜயசாந்தி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





