தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் நேற்று திருமண வரவேற்பு விழா ஒன்றில் ஜோடியாக வந்து பங்கேற்றது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அவரது மனைவி சங்கீதா கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் இப்படி ஒரு விஷயத்தை விஜய் செய்து மேலும் விவகாரத்தை சிக்கலாக்கி உள்ளார்.
ஏற்கனவே மனைவி பிள்ளைகளை விஜய் பிரிந்து வாழும் நிலையில் தவெக கட்சி நிர்வாகிகளும் தமிழக மக்களில் ஒரு தரப்பினும் விஜய் விஜய் என கொண்டாடி வரும் நிலையில் அவரது தனிமனித ஒழுக்கம் பண்பாடு திரிஷா நட்பால் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதிலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தந்தையில் மோசமான நடவடிக்கையால் மனம் வெறுத்துப் போன நிலையில் பேசிய ஒரு விஷயம் இப்போது இன்னும் விஜய்க்கும் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, விவாகரத்து கேட்டு சங்கீதா கோர்ட்டுக்கு போய்விட்டார். எப்படியாவது இந்த பிரச்னையை சுமூகமாக முடித்துவிட வேண்டும் என்ற மனநிலையில் விஜய் இருக்கிறார்.. இந்த சூழலில் அவர் தனது மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோர் மீது விஜய் கோபத்தில் இருக்கிறாரா, வருத்தத்தில் இருக்கிறாரா என்று எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
அவரது மனைவியும் மகனும் சொன்னதாக சில விஷயங்கள் விஜயின் காதுகளுக்கு போயிருக்கிறது. அதுதான் அவரை ரொம்பவும் வருத்தமடைய வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் சங்கீதா, இந்த விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு சென்றது நமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே காரணம் அல்ல.
இந்த தேர்தலில் விஜயை தோற்கடிக்க வேண்டும். அவங்க தோற்கறதை நாங்க பார்க்கணும் அப்படி ஒரு எண்ணத்தில் தான் இந்த விஷயத்தை கோர்ட்டுக்கு கொண்டு போயிருக்காங்க. குறிப்பாக விஜயோட பையன் சஞ்சய் இப்படி ஒரு வார்த்தையை அவரோட சர்க்கிள்ல பயன்படுத்தியதாக ஒரு தகவல் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் அது விஜயின் கவனத்துக்கு போயிருக்கிறது.
அது அவரை ரொம்பவும் காயப்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போது விஜய் சங்கீதாவிடம் சமரசம் பேசிட்டு இருக்காங்க, அவங்க மறுபடியும் சேரப் போறாங்க என்று பொய்யான தகவல்களை வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது ஊடக தர்மம் இல்லை என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





