- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிமுக தேமுதிக காங்கிரஸ் யாருடனும் கூட்டணி இல்லை… கடைசியில் விஜய் யாருடன் கூட்டணி வைத்தார் தெரியுமா?...

அதிமுக தேமுதிக காங்கிரஸ் யாருடனும் கூட்டணி இல்லை… கடைசியில் விஜய் யாருடன் கூட்டணி வைத்தார் தெரியுமா? – தவெக தலைவரை பொளந்து கட்டிய பிரபலம்!

- Advertisement -

சினிமாவில் நடிகராக மட்டுமே இருந்திருந்தால் விஜய் இன்னும் இன்னும் பல உச்சங்களை தொட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்த அவர் தான் இன்று தமிழகத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறார். மிக மோசமான கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக திரிஷாவுடன் அவர் காட்டும் நெருக்கம் அவரை கடும் சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, தமிழ்நாட்டு மக்களுக்காக இனிமேல் அடுத்த 33 வருஷத்தை கொடுக்கப் போவதாக ஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியிருந்தார். சங்கீதா விஜயுடன் சேர்ந்து இனிமேல் வாழப்போவதில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமே விஜய் உழைக்கப் போகிறார் என்று அவரது கட்சியினர், ரசிகர்கள் கூறினர்.

- Advertisement -

இந்த நிலையில் நடுவுல இந்த திரிஷா வந்தால் என்ன பண்ணுவீங்க என்பது போல திரிஷாவின் ஆட்டம் சூடு பிடித்ததால் விஜய் ரசிகர்களே இப்போது விரக்தி அடைந்து விட்டனர். சமீப காலமாக விஜயை சுற்றி நடக்கும் சர்ச்சைகளை பார்த்து கடுப்பாகி இனிமேல் விஜய்க்கு முட்டுக் கொடுக்க முடியாது என்று அவரது ரசிகர்களே வெளிப்படையாக பேசத் தொடங்கி விட்டனர்.

விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார், தேமுதிகவுடன் கூட்டணி வைப்பார், காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்த்த பலருக்கும் அல்வா கொடுத்துவிட்டு கடைசியில் திரிஷாவுடன் தான் அவர் கூட்டணி வைத்துள்ளார் என்று அவரது ரசிகர்களே கலாய்த்து ரீல்ஸ் போடும் அளவுக்கு விஜயின் நிலைமை ரொம்பவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

திரிஷா விவகாரத்தில் விஜய் நடந்து கொண்டது கொஞ்சம் கூட ஏற்புடையது இல்லை. இதற்கு மேலும் விஜய்க்கு யாரும் முட்டு கொடுக்க முடியாது. பார்த்திபன் மற்றும் சமுத்திரக்கனி திமுக ஆதரவாளர்களாக இருந்தாலும் விஜயின் மீதும் அவர்களுக்கு அதிகப்படியான அக்கறை உள்ளது. அதனால் தான் வீட்டிலேயே த்ரிஷாவை நான்கு சுவத்துக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்றும் குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைங்க என்றும் பேசினர்.

தேர்தல் முடியும் வரை விஜய் மற்றும் திரிஷா கம்முன்னு இருந்தால் ஜம்முன்னு இருக்கலாம் என்றும் அந்தணன் அந்த நேர்காணலில் ஆவேசமாக கூறியிருக்கிறார். நடிகை திரிஷாவுடன் விஜய்க்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு அவரது ரசிகர்கள் கட்சியினர் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் இதற்கு எதிரான தங்களது விரக்தியான மனநிலையை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்