- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தேவயானி தனது தம்பி நடிகர் நகுல் குறித்து கூறியதாவது, சின்ன வயசுல நகுல் ரொம்பவும் குண்டா கொழுகொழுன்னு இருப்பான். அவனுக்கும் எனக்கும் 11 வருஷம் வயசு வித்தியாசம். அவனை நான் ஒரு குட்டிக் குழந்தையாக பார்த்து இருக்கேன். நான் அவனுக்கு ஒரு அம்மா மாதிரி தான். அவனை குளிப்பாட்டுறதுல இருந்து சாப்பாடு ஊட்டுறதுல இருந்து புட்டிப் பால் கொடுக்கிறதுல இருந்து எல்லாமே நான் செஞ்சிருக்கேன். அக்கா தம்பி உறவு மாதிரி இல்லாம அம்மா பையன் உறவு மாதிரிதான் அது இருக்கும் என்று நடிகை தேவயானி நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





