- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 மாநிலங்களில் ஏப்ரல் 10ம் தேதிக்கு பிறகு இதுதான் நடைமுறை… புதிய கட்டுப்பாடுகளை விதித்த தென்னிந்திய...

5 மாநிலங்களில் ஏப்ரல் 10ம் தேதிக்கு பிறகு இதுதான் நடைமுறை… புதிய கட்டுப்பாடுகளை விதித்த தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்!

- Advertisement -

இந்தியில் வெளியாகும் திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு கேரளம் ஆந்திரா தெலங்கானா கர்நாடகம் மாநிலங்களில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் புதிய படங்கள் 4 வாரங்களில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் நேற்று பெங்களூருவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான சில வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இது தொடர்பாக ஐந்து மாநிலங்களை சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் ஓடிடி வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இதுகுறித்து பேசுகையில், ஓடிடி தளங்களில் ஒழுங்கற்ற முறையில் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின்றன. இதனால் கடந்த 2021ம் ஆண்டு முதல் திரையரங்குகள் பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டும்.

- Advertisement -

இதுகுறித்து தமிழ்நாடு ஆந்திரா கேரளம் தெலங்கானா கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள தயாரிப்பாளர்களிடமும் தெரிவித்துள்ளோம். இந்தி சினிமாவில் இதை கண்டிப்பான முறையில் பின்பற்றுவதால்தான் அங்கு அனைவரும் லாபகரமாக இயங்க முடிகிறது. ஆனால் தெற்கில் நாம் அத்தகைய முடிவுகளை எடுக்காமல் விட்டதால் பலத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

எனவே வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவை தயாரிப்பாளர்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். இந்த முடிவின்படி இனி தியேட்டரில் வெளியாகும் புதிய படங்கள் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களுக்கு வரும். இது தியேட்டர்களில் ரசிகர்களின் வருகையை அதிகரிக்கும் என்றாலும், ஓடிடி நிறுவனங்கள் இதற்கு சம்மதிக்குமா என்ற சிக்கலும் தயாரிப்பாளர்களுக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்