- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் 30 நாள் ஒளிந்து மறைந்து பதுங்கி இருந்தீங்களே…? மனவலிமை பத்தி உங்க தலைவருக்கு முதலில்...

சென்னையில் 30 நாள் ஒளிந்து மறைந்து பதுங்கி இருந்தீங்களே…? மனவலிமை பத்தி உங்க தலைவருக்கு முதலில் சொல்லுங்க – நடிகர் மீசை ராஜேந்திரன் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள குணச்சித்திர நடிகர் மீசை ராஜேந்திரன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பேசியிருப்பதாவது, வணக்கம். நான் மீசை ராஜேந்திரன். நேற்று நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் தவெக நிர்வாகி ஒருவர் திரு ரஜினி சார் பத்தி ஒரு விஷயம் பேசியிருக்கிறார். திமுக தந்த அழுத்தத்தால் தான் ரஜினி சார் பயந்து போய் அரசியலுக்கு வரவில்லை. மனவலிமை இல்லை என்று அவர் பேசியிருக்கிறார்.

இதில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன். திரு ரஜினி சார் அவர்கள் முன்பு திரு எம்ஜிஆர் அவர்கள் ஜெயலலிதா அம்மையார் போன்றவர்களிடம் கூட பயப்படவில்லை. இதை நாம் படித்திருக்கிறோம். பார்த்திருக்கிறோம். தெரிஞ்சிருக்கிறோம். தவெக நிர்வாகி ரஜினி சாருக்கு மனலிமை இல்லை என்று சொல்கிறார்.

- Advertisement -

நான் கேட்கிறேன். திரு விஜய் சாருக்கு மனவலிமை இருக்குதா? கரூர்ல 41 பேர் இறந்த சம்பவத்துல ஏர்ப்போர்ட்டுல இருந்து ஓடினீங்களே? இங்கே சென்னையில் வந்து 30 நாள் ஒளிஞ்சு மறைந்து பதுங்கி இருந்தீங்களே? அப்போது உங்க மனவலிமை எப்படி இருந்துச்சு? மக்களுக்கு தெரியாதா அது? நீங்க ஏன் அடுத்தவங்களை கம்பேரிஷன் பண்றீங்க?

உங்க மனவலிமையை ஸ்ட்ராங்குன்னு வேற சொல்றீங்க? உங்க மனவலிமை ஸ்ட்ராங்கா இருந்துச்சுன்னா ஏன் இன்னும் ஜனநாயகன் படத்தை உங்களால் ரிலீஸ் பண்ண முடியலே? அதனால்தான் நான் சொல்றேன். முதலில் அரசியல் பேச கத்துக்குங்க. அடுத்தவங்களை பற்றி பேசாதீங்க.

- Advertisement -

ரஜினி சார் அழகா சொல்லீட்டு போயிட்டார். கொரானா காலகட்டம். என்னுடைய உடல்நிலை சரியில்லை. அதனால் நான் அரசியலை விட்டு விலகறேன்னு அவர் தெளிவாக சொல்லிவிட்டு போனார். அறிக்கை கொடுத்துட்டு தான் அவர் விலகினார். எதுக்கு அடுத்தவங்களை கம்பேர் பண்றீங்க?

நீங்க அரசியல் பண்ணணும் என்றால் நீங்க அரசியல் பேசுங்க. நீங்க அரசியலுக்கு வந்தா ஆட்சிக்கு வந்தால் நாங்க இதை பண்ணுவோம் அதை பண்ணுவோமுன்னு சொல்லுங்க. ஆனா ஆட்சிக்கு நீங்க வரப்போறது இல்லே. அது வேற விஷயம். ஆனா கம்பேரிசம் பண்ணாதீங்க. மனவலிமையை பத்தி நீங்க சொல்லாதீங்க. முதலில் உங்க தலைவருக்கு மனவலிமை பத்தி எடுத்துச் சொல்லுங்க அப்புறம் வெளியே வந்து நீங்க சொல்லுங்க நன்றி வணக்கம் என்று நடிகர் மீசை ராஜேந்திரன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்