- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட கதையை நீங்களே டைரக்ட் பண்ணுங்க, இதுல விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைங்க -...

என்னோட கதையை நீங்களே டைரக்ட் பண்ணுங்க, இதுல விஜய் சேதுபதியை ஹீரோவாக நடிக்க வைங்க – டைரக்டர் மணிகண்டனுக்கு ஐடியா கொடுத்த பிரபல இயக்குனர்

- Advertisement -

ஒரு நல்ல படைப்பை, சந்தர்ப்ப சூழ்நிலையால் நாம் கொடுக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. மற்றவர்கள் மூலமாகவாவது அந்த படைப்பு மக்கள் பார்வைக்கு சென்றுவிட வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகள் சிலர் உண்டு. ஒரு படைப்பால் தனக்கு கிடைக்கும் பெருமையை விட, அந்த படைப்பு மக்களை அடைய வேண்டும் என்பதே அவர்களது லட்சியமாக இருக்கும்.

அப்படி பல இயக்குனர்கள், நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். நல்ல சினிமாவை தன்னால் இயக்க முடியாவிட்டால், நடிக்க முடியாவிட்டால் அந்த கதையை இயக்க மற்றொரு இயக்குனருக்கு சொல்லும் இயக்குனர் உண்டு, தன்னால் நடிக்க முடியாத கதாபாத்திரத்தை அந்த நடிகரை நடிக்க வையுங்கள் என்று சொல்லும் நடிகர்களும் உண்டு.

இப்படி கமல்ஹாசன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் பரிந்துரைத்து அவர்கள் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர்கள் பலர் உண்டு. அதே போல், பல வெற்றிப் படங்களை குறிப்பிட்டுச் சொல்லி அந்த படங்களின் சாயல்களில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களும் நிறைய தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் இப்போது போல் ஈயடிச்சான் காப்பியாக அந்த படங்கள் இருந்தது இல்லை.

சமீபத்தில் குட்நைட் படத்தில் நடித்த நடிகர் மணிகண்டனை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்பட்டு இருக்கிறார் இயக்குனர் ஆபாவாணன். இவர் ஊமைவிழிகள், இணைந்த கைகள் போன்ற மெகா ஹிட் படங்களை தந்தவர். விரைவில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடிப்பில் ஊமை விழிகள் 2 படத்தை இயக்கவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் இதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து சம்மதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறார்.

இதற்கிடையே போனில் அழைத்து பேசிவிட்டு, ஒரு ரெஸ்டாரெண்டில் குட்நைட் நடிகர் மணிகண்டனை சந்திக்க போன போது, அங்கு அவர் இல்லை. அதற்கு பதிலாக காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இருந்திருக்கிறார். யாரோ போன் நம்பரை மாற்றித் தந்துவிட குட்நைட் மணிகண்டனுக்கு பதிலாக, காக்கா முட்டை டைரக்டர் மணிகண்டனை ஆபாவாணன் சந்தித்த நேர்ந்துள்ளது.

எனினும் நடந்த தவறை புரிந்துக்கொண்டு பரஸ்பரம் நட்பாக அவர்கள் பேசியுள்ளனர். அப்போது ஆபாவாணன், என்னிடம் ஒரு கதை உள்ளது. நீங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால் இந்த கதையில் அவரை நடிக்க வையுங்கள் என்று கூறி கதையையும் கூறியிருக்கிறார். அதற்கு மணிகண்டனும் சம்மதம் தெரிவித்து சென்றிருக்கிறார். ஆபாவாணன் போன்ற அனுபவமுள்ள படைப்பாளிகளால்தான், இதுபோல் தன் கதையை மற்றொரு இயக்குனருக்கு தாரை வார்க்க மனம் வரும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்