நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன்தான் மோகன் ராஜா. இவரை ரீமேக் ராஜா என்றும் தமிழ் சினிமாவில் பலர் கிண்டலாக சொல்வதுண்டு. ஏனென்றால், பிற மொழிகளில் ஹிட் ஆன படங்களை, தமிழில் ரீமேக் செய்து தமிழில் எடுத்து, வெற்றிப்படமாக்கி விடுவார், ஜெயம் ரவி நடித்த சில படங்கள் கூட ரீமேக் படங்கள்தான். குறிப்பாக, அவரது முதல்படம் ஜெயம், ரீ மேக் படம்தான்.
மோகன் ராஜாவின் இயக்கத்தில் தனி ஒருவன், காட்பாதர், வேலைக்காரன், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியன், உனக்கும் எனக்கும், எம்குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தில்லாலங்கடி, ஜாம்போ உள்ளிட்ட படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் சில படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.
அதிலும் குறிப்பாக ஜெயம், வேலைக்காரன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாகவும், ஜெயம் ரவியின் திரை பயணத்தில் முக்கிய படங்களாகவும் அமைந்திருந்தன. இந்த படங்களில் மாறுபட்ட கோணத்தில், மிக வித்யாசமான நடிப்பை ஜெயம் ரவி வெளிப்படுத்திய படம் தனி ஒருவன்.
இந்த படத்தில், நடிகர் அரவிந்த் சாமி வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். நயன்தாரா, தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயம் ரவி ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அரவிந்த் சாமி, மிகப்பெரிய டாக்டராக இருந்துக்கொண்டு, மருத்துவ துறையில் ஊழல்வாதியாக இருப்பார்.
கதாநாயகனும் அதி புத்திசாலி, வில்லனும் அதி புத்திசாலி என்ற கோணத்தில் இந்த படம் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்ற விறுவிறுப்பான திரைக்கதையில் இந்த படம் இருந்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தனி ஒருவன் 2 படத்தை எடுக்க தம்பி ஜெயம்ரவியிடம் கால்ஷீட் கேட்டும், இன்னும் தராமல், சொந்த அண்ணனையே பல ஆண்டுகளாக காத்திருக்க வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.
காத்திருந்து, காத்திருந்து விரக்தியடைந்த மோகன் ராஜா, இப்போது நடிகராக அவரும் அவதாரம் எடுத்து இருக்கிறார். தற்போது எடுக்கப்பட்டு வரும் ஒரு புதிய படத்தில், பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு அண்ணனாக அவர் நடிக்கிறார். அதாவது, ஜெயம் ரவியின் அண்ணன், நடிகராகி அந்த படத்திலும் அண்ணன் கேரக்டரில் நடிக்கிறார் என்பதுதான் இதில் லாஜிக்காக அமைந்துள்ளது.





