- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தில் நடிக்க கமிட் ஆன பிரபல மலையாள நடிகை… மீண்டும் ரஜினிக்கு ஜோடியா...

தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட் ஆன பிரபல மலையாள நடிகை… மீண்டும் ரஜினிக்கு ஜோடியா என குதூகலிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்துடன் இந்த ஷூட்டிங் முழுமையாக நிறைவடைய உள்ளது. இந்த படத்துக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு தலைவர் 173 என தற்காலிகமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

டான் பட இயக்குனர் சிபி சக்வர்த்தி டைரக்ட் செய்யும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்க கமிட் ஆகியிருக்கிறார். வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று படப்பிடிப்பை துவங்க உள்ளனர். வரும் 2027ம் ஆண்டில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு ரெட் ஜெயின்ட் மூவீஸ் தயாரிப்பில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்த நாளில் அல்லது டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் தலைவர் 173 படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திலும் சாய்பல்லவி கமிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை ஷோபனாவும் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாரா என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் ஷோபனா தலைவர் 173 படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது.

தளபதி சிவா போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஷோபனா. மேலும் இது நம்ம ஆளு பொன்மனச் செல்வன் மல்லுவேட்டி மைனர் என்கிட்ட மோதாதே பாட்டுக்கு ஒரு தலைவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஷோபனா நடித்திருக்கிறார். இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாத அவர் பரத நாட்டிய கலைஞராக உள்ளனர். மலையாளத்தில் மோகன்லாலுடன் துடரும் படத்திலும் ஷோபனா சமீபத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்