- Advertisement -
Homeபொழுதுபோக்குபோதும் இதுவே போதும், இது மனித குலத்துக்கே அவமானம் - நடிகை குஷ்பூ ஆவேசம்!

போதும் இதுவே போதும், இது மனித குலத்துக்கே அவமானம் – நடிகை குஷ்பூ ஆவேசம்!

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நடிகை நயன்தாரா பெயரை குறிப்பிட்டு திமுக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி குறித்து கிண்டலடித்து பேசியிருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்டார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

நடிகை நயன்தாரா பேசியதற்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நடிகை குஷ்பு தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பெண்கள் குறிப்பாக பெண் நடிகர்கள் உங்கள் சொத்து அல்ல. உங்கள் பேச்சு பொருள் அல்ல. அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும் போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டம் அல்ல.

- Advertisement -

ஒரு பெண் நடிகரின் பெயர் மலிவான நகைச்சுவைகளுக்கோ அற்பமான அவமானங்களுக்கோ அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கோ ஒரு கருவியல்ல. மற்றவர்களை கேலி செய்வதற்கோ அல்லது ஒரு கருத்தை நிரூபிப்பதற்கு ஒரு பெண்ணின் அடையாளத்தை பயன்படுத்துவது பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையும் மட்டுமே அம்பலப்படுத்துகிறது.

போதும் இதுவே போதும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணுக்கு பிறந்தவர் தான். ஒரு பெண் நடிகர் பற்றி நீங்கள் சாதாரணமாக கருத்து தெரிவிப்பதற்கு முன்பு உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அந்த உதாரணம் உங்கள் தாய் சகோதரி மனைவி மகள் அல்லது உங்கள் சொந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவராக இருந்தால் நீங்கள் இதேபோல் பேசுவீர்களா?

- Advertisement -

மக்கள் இது போன்ற இழிவான கருத்துக்களை கூறும்போது அவர்கள் குறிப்பிடும் பெண்ணை சங்கடப்படுத்துவதில்லை. மாறாக அவர்கள் தங்களின் சொந்த மனநிலையையும் மோசமான வளர்ப்பையும் அடிப்படை மனித பண்பினையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

இது மரியாதை குறைவானது மட்டுமல்ல. இது மனித குலத்திற்கே ஒரு அவமானம். மேலும் நினைவில் கொள்ளுங்கள். மரியாதை என்பது ஒருபோதும் ஒரு வழி பாதை அல்ல. பெண்களை மதிக்கவும் என்று அந்த பதிவில் நடிகை குஷ்பூ சுந்தர் ஆவேசமாக பதிவிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்