இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஷால் நடிப்பில் புருஷன் என்ற படத்தை டைரக்ட் செய்து வந்தார். இந்த படத்தில் நடிகை தமன்னா நடிகர் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வந்த நிலையில் திடீரென அரசியல் களத்துக்கு வந்துவிட்டார். அதிமுக பாஜக கூட்டணியில் இயக்குனர் சுந்தர் சி தேர்தல் களத்தில் வேட்பாளராக நிற்கிறார்.
மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து சுந்தர் சி போட்டியிடுகிறார். தவெக கட்சி குறித்தும் தலைவர் விஜய் குறித்தும் தேர்தல் பிரசாரத்தில் எதுவுமே பேச மாட்டேன். இந்த தொகுதியில் அதிமுக திமுக இடையில்தான் போட்டி என்றும் சுந்தர் சி ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு கலகலப்பு 2 ஆகிய 2 படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக இருந்த நிலையில், கலகலப்பு 3 படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளருக்கும் இயக்குனர் சுந்தர் சிக்கும் சம்பள பிரச்னை ஏற்பட்ட நிலையில் அந்த படம் அப்படியே டிராப் ஆகி விட்டது.
இதில் முன்பணமாக வாங்கிய 50 லட்சம் ரூபாயை இயக்குனர் சுந்தர் சி தரவில்லை என தயாரிப்பாளர் சமீபத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலகலப்பு 3 படத்தில் தான் நடிகர் மிர்சி சிவா நாயகனாக நடிக்க இருந்தார். இப்போது அந்த படம் உருவாவது கேள்விக்குறியாகி உள்ளது.
இயக்குனர் ராம் இயக்கத்தில் பறந்து போ என்ற படத்தில் மிர்சி சிவா நடித்திருந்தார். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்துக்கு பிறகு கலகலப்பு 3 படத்தில்தான் மிர்சி சிவா நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அதுவும் ஏமாற்றத்தில் முடிந்து விட்டது.
இந்த நிலையில் மிர்சி சிவாவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த தமிழ் படம் இயக்குனர் சிஎஸ் அமுதனிடம் தமிழ்படம் 3ம் பாகம் இயக்குமாறு மிர்சி சிவா கூறியிருக்கிறார். இருவரும் அதுகுறித்து ஆலோசித்த நிலையில் விரைவில் தமிழ் படம் 3ம் பாகம் உருவாக உள்ளது. தமிழ் சினிமாவையே கலாய்த்து எடுக்கப்பட்ட தமிழ் படம் முதல் பாகம் பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் 3ம் பாகமும் மாஸ் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.





