- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் அதை முடிவு பண்ணுங்க - குட்நைட் பட இயக்குனரிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய...

முதலில் அதை முடிவு பண்ணுங்க – குட்நைட் பட இயக்குனரிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மலையாள நடிகர் மோகன்லால்!

- Advertisement -

நடிகர் மணிகண்டன் நடித்த குட்நைட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரை அழைத்துப் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், கண்டிப்பாக நாம் இருவரும் ஒரு படம் இணைந்து செய்யலாம். கதை ரெடி பண்ணுங்க என்று அப்போதே கூறிவிட்டார். அவரும் சிவகார்த்திகேயனுக்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்திருக்கிறார்.

ஆனால் அமரன் பராசக்தி படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இப்போது தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்கப் போய்விட்டார். இந்த படத்துக்கு பிறகுதான் விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் உறுதியளித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனுக்காக குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் எழுதிய கதை அப்பா மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. இந்த ஸ்கிரிப்டில் அப்பா கேரக்டரில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் விநாயக் சந்திரசேகர், நாயகன் சிவகார்த்திகேயன் இருவருமே ஆலோசித்து முடிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் அடுத்தடுத்த மலையாள படங்களில் பிஸியாக நடித்துவரும் மோகன்லால், இப்போதைக்கு என்னிடம் கால்ஷீட் இல்லை. வருகிற 2026 மார்ச் மாதத்துக்கு பிறகு கால்ஷீட் தருகிறேன் என்று 6 மாதங்களுக்கு முன்பே கடந்தாண்டில் கூறியிருக்கிறார். அதனால் விநாயக் சந்திரசேகரும் அவரை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லாலிடம் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் கால்ஷீட் குறித்து பேசியிருக்கிறார். ஏற்கனவே இப்படி இரண்டு மூன்று முறை பேசிய போது மோகன்லால் கால்ஷீட் தந்திருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட் இல்லாததால் அது கேன்சலாகி உள்ளது. இப்போது சேயோன் படத்தில் நடித்து வருவதால் குறிப்பிட்ட தேதியில் கால்ஷீட் கேட்க முடியாமல் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் குழப்பத்தில் உள்ளார். 8 மாதங்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.

எனினும் சமீபத்தில் மோகன்லாலிடம் கால்ஷீட் குறித்து இயக்குனர் பேசிய போது, ஏற்கனவே நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளை நீங்கள் பயன்படுத்தாமல் ரத்து செய்து விட்டீர்கள். இப்படி அடிக்கடி செய்தால் எனது மற்ற படங்களின் ஷூட்டிங் பணிகள் பாதிக்கப்படும். எனவே தெளிவாக முடிவு செய்துவிட்டு கால்ஷீட் கேளுங்கள் என்று கட் அண்ட் ரைட்டாக கூறியிருக்கிறார். அதனால் எஸ்கே கால்ஷீட்டுக்காக இயக்குனர் காத்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்