- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது மனைவியை பற்றிய தரக்குறைவான விமர்சனம் - ஒரு கணவனாக வேடிக்கை பார்க்கலாமா விஜய்? -...

தனது மனைவியை பற்றிய தரக்குறைவான விமர்சனம் – ஒரு கணவனாக வேடிக்கை பார்க்கலாமா விஜய்? – பிரபல இயக்குனர் ஆவேசம்!

- Advertisement -

நடிகர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த மாதம் 27ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருவது கவனிக்கத்தக்கது.

தனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா விவாகரத்து மனுவில் கூறியிருந்தார். யார் அந்த நடிகை என்று பெயரை அவர் குறிப்பிடாமல் தவிர்த்தார். இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய், சென்னையில் நடந்த தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு விழாவுக்கு நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே நிற உடையில் ஜோடியாக வந்து மணமக்களை வாழ்த்தினார்.

இதன்மூலம் தனது மனைவி சங்கீதா புகாரில் கூறிய அந்த நடிகை திரிஷா தான் என்பதையும் விஜய் பகிரங்கமாக உறுதி செய்தார். ஆனால் இந்த விவகாரத்தில் தவெக கட்சியினரும் விஜய் ரசிகர்களும் சங்கீதாவையே தரக்குறைவாக பேசினார்கள். கண்டபடி இழிவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். ஆனால் விஜய் மட்டும் தனது கட்சியினரை ரசிகர்களை கண்டிக்காமல் மௌனமாக இருந்தார்.

தன்னுடன் 26 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாலி கட்டிய மனைவியை, தனது பிள்ளைகளின் தாயை இப்படி மற்றவர்கள் தரக்குறைவாக பேசுவதை விஜய் தடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அதை விஜய் சிறிதும் கண்டு கொள்ளவே இல்லை. திரிஷாவுடன் தொடர்பில் இருப்பதை பகிரங்கப்படுத்திய சங்கீதாவை பழிவாங்கும் ஒரு மனநிலையில் விஜய் இப்படி நடந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் கூறியதாவது, சங்கீதாவின் போட்டோவை போட்டு அதற்கு கீழே கீழ்த்தரமாக ஒருவர் எழுதியிருந்தார். அதை பார்த்த போது எனக்கு ரொம்பவும் சங்கடமாக இருந்தது. மக்கள் எப்படி இவ்வளவு கீழே இறங்கி பேசுகிறார்கள் என்று நினைத்தேன்.

நான் பார்த்த அந்த பதிவு விஜய் கண்ணில் பட்டதா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் இப்படி நடக்கும்போது அவர் ஒரு குரல் கொடுத்திருக்க வேண்டாமா? ஏனென்றால் இதே பதிவை விஜயின் மகளும் மகனும் பார்க்கும்போது தன்னுடைய அம்மாவை இப்படி எல்லாம் விமர்சிக்கிறார்களே என்று எந்த அளவுக்கு வருத்தப்படுவார்கள் என்று அமீர் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்