- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னைய மீறி லீக் பண்ண முடியாது - லியோ பட ஷூட்டிங்கில் விஜய் போட்ட கட்டுபாடுகள்?...

என்னைய மீறி லீக் பண்ண முடியாது – லியோ பட ஷூட்டிங்கில் விஜய் போட்ட கட்டுபாடுகள்? ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க போலயே!

- Advertisement -

விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் கூறியதை கேட்டு படக்குழுவினர் பல கட்டுப்பாடுகளை போட்டுள்ளார்களாம்.

- Advertisement -

இதற்கு முன்பு விஜய் நடித்து வெளியான “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த படப்பிடிப்பில் இருந்து பல வீடியோக்கள் லீக் ஆனது. குறிப்பாக “ஜிமிக்கி கம்மல்”, “ரஞ்சிதமே’ ஆகிய பாடல்கள் படமாக்கும்போது அந்த படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த டெக்னீஷியன்கள் சிலர் வீடியோ எடுத்து லீக் செய்தனர். இதனால் விஜய் கடும் கோபத்தில் இருந்தார்.

இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக விஜய் பல கண்டிஷன்களை போட்டுள்ளாராம். அதாவது முதலில் ஜிம் பாய்களை மாற்றச்சொன்னாராம். மேலும் படப்பிடிப்பில் பணியாற்றும் டெக்னீஷியன்கள், நடிகர்கள் ஆகியோரின் மொபைல் ஃபோன்களை ஸ்டூடியோவுக்கு வெளியிலேயே அவர்களிடம் இருந்து வாங்கி ஒரு பத்திரமான இடத்தில் வைக்க ஒரு குழுவை தயார் செய்துள்ளனராம். அவர்களுக்கென்று தனி தனியாக டோக்கன் நம்பர்கள் கொடுக்கப்படுமாம். படப்பிடிப்பின் இடைவேளையிலும் படப்பிடிப்பு முடிந்த பிறகும் டோக்கனை கொடுத்து அவரவர்களின் மொபைல் ஃபோன்களை வாங்கிக்கொள்ளலாமாம்.

- Advertisement -

மேலும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஆகியோரின் உறவினர்கள், நண்பர்களுக்கு ஸ்டூடியோவுக்குள் படப்பிடிப்பை பார்க்க அனுமதி இல்லையாம். இவ்வாறு பல நாட்களாக படக்குழுவினர் பல கட்டுபாடுகளை கடைப்பிடித்து “லியோ” படத்தின் படப்பிடிப்பில் இருந்து எந்த ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ லீக் ஆகாமல் பார்த்துக்கொள்கிறார்களாம்.

- Advertisement -

சற்று முன்