தமிழ் சினிமாவில் துவக்கத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஷங்கர். பிறகு ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
அர்ஜூன் நடித்த ஜெண்டில் மேன் படத்தை தொடர்ந்து அவரே மீண்டும் நடித்த முதல்வன் விக்ரம் நடித்த அந்நியன் ஐ படங்கள் மற்றும் கமல் நடிப்பில் இந்தியன் மற்றும் இந்தியன் 2, ரஜினிகாந்த் நடித்த சிவாஜி எந்திரன் மற்றும் 2.0 விஜய் நடித்த நண்பன் சித்தார்த் நடித்த பாய்ஸ் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் பிரபுதேவா நடித்த காதலன் அனில் கபூர் நடித்த நாயக் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
தொடர்ந்த இப்போது தெலுங்கில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதே போல் கடந்தாண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படமும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்தியன் 3 படம் உருவாக வெளியாக ஆறு மாதங்களாகும் என்றும் ஷங்கர் கூறியிருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளில் 15 படம், இன்னும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்காலாமோ என்று எப்பவாவது உங்களுக்கு தோன்றி இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, என்னை கேட்டால் இவ்வளவு பண்ணியதே பெரிய விஷயம்தான். ஆனால் நிச்சயமாக இன்னும் நிறைய படங்கள் பண்ணி இருக்கலாம்.
ஆனால் எதிர்பாராமல் சில படங்கள் 3 ஆண்டுகள் வரை ஆனது துரதிஷ்டவசமானது. அது வந்து என்னுடைய கண்ட்ரோலில் இல்லாமல் நடந்தது. அது எதிர்பாராமல் நடந்தது. அப்படி ஆகாமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் படங்கள் பண்ணியிருக்கலாம்.
அப்படி என்றாலும் இன்னும் 2 அல்லது 3 படங்கள் எக்ஸ்டரா பண்ணியிருக்கலாம். அவ்வளவுதான். அந்த ஆதங்கம் இருக்கு. ஆனால் இது ரியாலிட்டி. நம்ம நினைக்கிற மாதிரி வாழ்க்கையில் நடக்காது. அது போற போக்குல நம்மால முடிஞ்ச பெஸ்ட்டை பண்ணனும் என்பதுதான் முக்கியம் என்று ஷங்கர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





