- Advertisement -
Homeபொழுதுபோக்குகாந்தாரா பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு இடையே மோதல் - சம்பளம் பிரச்னையில்...

காந்தாரா பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு இடையே மோதல் – சம்பளம் பிரச்னையில் அப்படி செய்தாரா காந்தாரா பட நாயகன்?

- Advertisement -

இந்திய திரையுலகில் காந்தாரா மற்றும் காந்தாரா சேப்டர் 1 ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ரசிகர்களால் மறக்க முடியாத மிகச்சிறந்த திரைப்படங்கள் என்றால் அது மிகையல்ல. அந்தப் படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

காந்தாரா, காந்தாரா சேப்டர் 1 ஆகிய இரண்டு கன்னட திரைப்படங்களையும் கொம்பாலே பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்தது. கன்னடத்தில் உருவான இந்த படங்கள் தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படம் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட நிலையில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. முதல் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து காந்தாரா படம் 2ம் பாகம் உருவானது. 2025ம் ஆண்டில் வெளியான காந்தாரா சேப்டர் 1 படம் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் உருவான நிலையில், 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.

இந்நிலையில் காந்தாரா படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை பாலோ செய்து வந்த நடிகர் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இப்போது அன்- பாலோ செய்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை கேள்வியை எழுப்பியுள்ளது.

காந்தாரா படங்களின் இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே வியாபார ரீதியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவ்வாறு நடிகர் ரிஷப் ஷெட்டி செய்திருக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காந்தாரா சேப்டர் 1 படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமல் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ரிஷப் ஷெட்டி பேசியதாகவும் சொல்கிறார்கள்.

அதனால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டதா? 800 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் பெரிய தொகையை பங்கு தர மறுக்கிறார்களா என்பது குறித்து தெரியவில்லை. இருந்தாலும் இரண்டு தரமான மிகச் சிறந்த படங்களை ரசிகர்களுக்கு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே இப்படி ஒரு மோதல் ஏற்பட்டிருப்பது கன்னட சினிமாவுக்கு நல்லதல்ல என்று கன்னட ரசிகர்கள் மிகவும் வருத்தப்படுகின்றனர்.

சற்று முன்