தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் பல படங்களில் நடித்தவர் நடிகை மோகினி. குறிப்பாக விக்ரமன் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற படத்தில் கதையின் நாயகியாக மோகினி நடித்திருந்தார். இந்த படத்தில் ஆனந்த் பாபு விவேக் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.
தொடர்ந்து நடிகை மோகினி ஈரமான ரோஜாவே நாடோடி பாட்டுக்காரன் புதிய மன்னர்கள் உனக்காக பிறந்தேன் சின்ன மருமகள் வனஜா கிரிஜா உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் பட்டுக்கோட்டை பெரியப்பா சின்ன ராஜா ஜமீன் கோட்டை என பல படங்களில் நடித்திருந்தார். மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்தவர்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மோகினி சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை மோகினி கூறியதாவது, மணிரத்தினம் இயக்கிய இரண்டு படங்களை நான் மிஸ் செய்து விட்டேன்.
திருடா திருடா படத்தில் ஹீரா கேரக்டரில் நான்தான் நடிக்க வேண்டி இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அந்த படத்தில் நான் நடிக்க முடியவில்லை. ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்திலும் பானுப்பிரியா நடித்த கேரக்டரில் என்னை தான் நடிக்கச் சொன்னார்கள். அதிலும் நடிக்க முடியாமல் போய் விட்டது.
அதன்பிறகு இதுவரை மணிரத்னம் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைக்கவில்லை. ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இனிமேல் வாய்ப்பு கிடைத்தாலும் ரஜினி படத்தில் நடிக்க மாட்டேன். ஏனென்றால் முடிக்கு வெள்ளை நிற டை எல்லாம் அடித்து அவருக்கு மாமியாராக நடிக்க சொல்வார்கள். அதனால் நடிக்க மாட்டேன்.
அவர் தூரத்து கனவாக எனக்கு இருந்தாலும் அழகான கனவாக இருப்பார். அதனால் எனக்கு வருத்தம் என்பது இல்லை. நான் செய்த தவறுகள் மீது வேண்டுமென்றால் வருத்தம் இருக்கும். என்மேல் எனக்கு சில நேரங்களில் நிறைய கோபம் வரும். இதுதான் என் பிளஸ் மற்றும் மைனஸ் ஆக உள்ளது என்று நடிகை மோகினி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்





