தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர். தெலுங்கு மலையாளம் இந்தி படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் அவர் நடித்த 16 வயதினிலே, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, வாழ்வே மாயம், மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை, ஜானி, ராணுவ வீரன் போன்ற பல படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.
ஒரு கட்டத்தில் பாலிவுட் பக்கம் சென்ற நடிகை ஸ்ரீதேவி, பல இந்தி படங்களில் நடித்தார். அனில் கபூரின் அண்ணன் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஸ்ரீதேவி, மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பாத்ரூமில் பாத்டப்பில் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் அளவில் மிகப்பெரிய சோகத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர், இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் தற்போது நடிக்க துவங்கியிருக்கிறார். தேவரா 1 என்ற படத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்துள்ளார். இது அவரது 30வது படம். இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தேவரா 1 படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து ஹைதராபாத் ஆகிய பகுதிகளை விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளை நெருங்கியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வருகிற 27ம் தேதி தேவரா 1 படம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர், கதாநாயகி ஜான்வி கபூர், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகை ஜான்வி கபூர், இன்று நானும் என் குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கு நீங்கள் என் அம்மா ஸ்ரீதேவி மீது காட்டிய அன்பு தான் காரணம். அதற்கு எப்போதுமே நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
என் அம்மாவுக்கு கொடுத்த அதே அன்பை எனக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று தமிழில் பேசினார். மேலும் விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். ஜான்வி கபூர் தமிழில் நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே ரசிகர்கள் கோரிக்கை விடுவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இதுபற்றி கூறியிப்பதால், விரைவில் அவர் தமிழில் நடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.





