- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக தலைவர் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்த சீரியல்...

தவெக தலைவர் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்த சீரியல் நடிகர் சஞ்சீவ் – இவர் தளபதியின் மிக நெருக்கமான நண்பராச்சே?

- Advertisement -

திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். இவர் நடிகர் விஜயின் நெருக்கமான நண்பர். பத்ரி உள்ளிட்ட சில படங்களில் விஜயுடன் இணைந்து நடித்திருக்கிறார். இன்னும் பல படங்களில் அவர் தனித்தும் நடித்திருக்கிறார். இப்போதும் சஞ்சீவ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்க்கு சினிமாவில் நெருக்கமான நண்பர்கள் மிகவும் குறைவுதான். அதில் நடிகர் சஞ்சீவும் ஒருவர். ஒருமையில் வாடா போடா என்றும் பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக அவர்கள் இருந்தாலும் விஜய் நடித்த படங்களில் தனக்கு வாய்ப்பு கேட்கும் வழக்கம் இல்லாதவர் சஞ்சீவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒருமுறை விஜய்க்கும் சஞ்சீவுக்கும் ஏதோ பேச்சுவார்த்தையின் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் 6 மாதங்களுக்கு மேலாக விஜய் சஞ்சீவ் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். அதன் பிறகு சஞ்சீவின் மனைவிதான் இந்த பிரச்னையில் தலையிட்டு விஜயிடம் பேசி அவர்களது சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

சீரியலில் தொடர்ந்து நடிக்கும் நடிகர் சஞ்சீவ் அப்படியே விஜயின் மேனரிஸங்களை தன் நடிப்பில் உடல் மொழியில் கொண்டு வந்து விடுகிறார். இதுபற்றி ஒருமுறை சஞ்சீவிடம் பேசிய விஜய், டேய் நீ அப்படியே என்னை மாதிரி சீரியலில் நடிக்கறே. அதை பார்க்கும் மக்கள் என் படத்தை பார்க்கும் போது உன்னை மாதிரி நான் நடிக்கிறேன்னு நெனைச்சுக்குவாங்கடா என்றும் கிண்டல் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சஞ்சீவ் கூறியதாவது, விஜய் சினிமாவுக்குள் வரும்போது அவரை எனக்கு நன்றாக தெரியும். சினிமாவில் பெரிய ஹீரோவாக வருவார் என்று எனக்கு அப்போதே தோன்றியது. அது நிஜத்திலும் நடந்தது.

அதேபோல்தான் இப்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சயும். சஞ்சய் இயக்கிய குறும்படங்களை நான் பார்த்திருக்கிறேன். விஜய் போலவே அவரது மகனும் தமிழக மக்கள்கிட்ட பெரிய பெயரை சம்பாதிப்பார் பாருங்க. விஜய் போல அவருடைய மகனும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆளாக கண்டிப்பாக ஒருநாள் வருவார் என்று நடிகர் சஞ்சீவ் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்