- Advertisement -
Homeபொழுதுபோக்குகொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் தங்க மறுத்த முதல்வர் எம்ஜிஆர், சாதாரண ஓட்டலில் தங்கி அவர்...

கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் தங்க மறுத்த முதல்வர் எம்ஜிஆர், சாதாரண ஓட்டலில் தங்கி அவர் செய்த தரமான சம்பவம் – தலைவா நீங்க வேற லெவல்!

- Advertisement -

கொல்கத்தாவில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியாகும். கடந்த 1982ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைத்ததால் அங்கு சென்று முதல்வர் எம்ஜிஆர் திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் கட்ட காரணமே எம்ஜிஆர் தான். அந்த கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்ஜிஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. 2 நாட்கள் அங்கு தங்கினார். அப்போது மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார். எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட்டார்.

- Advertisement -

விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் 2 நாட்களும் எம்ஜிஆர் தங்குவதாக ஏற்பாடு. பிரம்மாண்டமான ஆடம்பரமான ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்ட எம்ஜிஆர், அந்த இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் இந்த இடம் நமக்கு வேண்டாம். ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம் என்று கூறிவிட்டு புறப்பட்டார்.

அதிர்ச்சியடைந்த மேற்குவங்க அதிகாரிகள், ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு எம்ஜிஆர் புன்னகைத்தபடியே, உங்களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால் நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும் என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.

- Advertisement -

பிறகு ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் டல்ஹவுசி சதுக்கம் என்ற பகுதியில் ஒரு ஓட்டலில் தங்கினார். தன்னுடன் வந்த உதவியாளர்கள் தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜபோக வசதிகளுடன் இலவசமாக தங்குவதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்ஜிஆர்.

கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்ஜிஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வந்துள்ளனர். அவர்களில் பலர் சாதாரண மக்கள். எம்ஜிஆரின் கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தினர். அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்ஜிஆர் ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்ஜிஆரை மனதார வாழ்த்திச் சென்றனர்.

- Advertisement -

சற்று முன்