- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினியோட நல்ல மனசு அவரது மனைவி லதாவுக்கு இல்லே, ரஜினி அடிக்கடி இமயமலைக்கு போறதே...

நடிகர் ரஜினியோட நல்ல மனசு அவரது மனைவி லதாவுக்கு இல்லே, ரஜினி அடிக்கடி இமயமலைக்கு போறதே அதனால்தான் – ஓபனாக பேசிய பிரபல நடிகர்!

- Advertisement -

பொதுவாகவே பெரிய வெற்றியாளர்கள் உலகம் கொண்டாடும் மனிதர்கள் எல்லாமே அவர்களது வீடுகளில் குறிப்பாக மனைவி பிள்ளைகளிடம் அந்த அளவுக்கு மதிப்பு மரியாதைக்கு உரிய நபர்களாக நடத்தப்பட மாட்டார்கள். இதில் பெரும்பாலான ஆண்கள் மனைவிக்கு கட்டுப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்.

இதற்கு யாருமே விதிவிலக்கு அல்ல. பெரும்பாலான மனிதர்கள் அப்படிதான் இருக்க வேண்டிய குடும்ப சூழல் நீடிக்கிறது. அப்படி மனைவியை மதிக்காமல் பொருட்படுத்தாத பட்சத்தில் அவர்கள் நீதிமன்றத்துக்கு விவாகரத்து கேட்டு செல்லும் சூழல்தான் ஏற்படுகிறது. அதனால் குடும்ப பிரச்னைகளை விட்டுக்கொடுத்து தம்பதி வாழும் போதுதான் அந்த குடும்பம் ஜெயிக்கிறது.

- Advertisement -

அதனால் எப்போதுமே வெற்றியாளராக சமூகத்தில் கொண்டாடப்படும் மனிதர்கள் தனது மனைவி பிள்ளைகள் குடும்பம் என்று வரும்போது தனக்கு விருப்பம் இல்லாத சில செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும் சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அவர்களை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. இதுதான் யதார்த்தமான உண்மை.

இதைதான் ஒருமுறை நடிகை ரோஜாவின் கணவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி ஒரு விழா மேடையில் பேசும்போது, குடும்பத்தை ஜெயித்தால் வாழ்க்கையில் தோற்று விடுவாய். குடும்பத்தில் தோற்றால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் கூட குடும்ப சூழலை அட்ஜஸ்ட் பண்ண வேண்டிய நெருக்கடி தவிர்க்க முடியாததாக உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ரஜினி பெயரை கெடுக்க அவரது வீட்டிலிருந்தே வேலை செய்பவர்தான் லதா ரஜினிகாந்த். கல்யாண மண்டபத்திற்கு டேக்ஸ் கட்டாமல் விட்டது, ஸ்கூலில் வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளம் கொடுக்காமல் விட்டது என பயங்கர கஞ்சத்தனமாக அவர் நடந்து கொள்வார்.

ரஜினிகாந்த் இந்த வயதிலும் படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார். அதில் சில லட்சங்கள் தான் இதற்கு எல்லாம் செலவாகும். ஆனால் அந்த பணத்தை கொடுக்கும் மனசு லதாவுக்கு கிடையாது. அவ்வளவு கஷ்டப்படுகிற குடும்பமா? என்று நீதிமன்றமே கேவலமாக கேட்டது. அதனால் தான் ரஜினிகாந்த் மன வேதனை தாங்க முடியாமல் இமயமலைக்கு போகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்