- Advertisement -
Homeபொழுதுபோக்கு2026ம் ஆண்டில் இதுவரை வெளியான 70 படங்கள் - இதில் பாஸ் பண்ணியது 10 படங்கள்...

2026ம் ஆண்டில் இதுவரை வெளியான 70 படங்கள் – இதில் பாஸ் பண்ணியது 10 படங்கள் கூட இல்லையா? என்னய்யா இது, தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!

- Advertisement -

2026ம் ஆண்டு துவங்கி 3ம் மாதமான மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில் இதுவரை இந்த 2026ம் ஆண்டில் 66 தமிழ் படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. இதுதவிர ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 4 படங்களையும் சேர்த்து மொத்தம் 70 படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் 96/66 செல்லமடா நீ எனக்கு காதல் ரீசெட் ரிபீட்டு முஸ்தபா முஸ்தபா ஓ பட்டர்பிளை வடம் வசூல் மன்னன் யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன் உள்ளிட்ட 9 படங்கள் வெளியாகின. மார்ச் மாதம் கடந்த 13ம் தேதி அந்தோணி திவ்யா கெளுத்தி கெணத்த காணோம் கொலை சேவல் போலீஸ் ஃபேமிலி வெஞ்சன்ஸ் வவ்வல்ஸ் ஆகிய படங்கள் வெளி வந்தன. இதில் கெணத்த காணோம் படத்துக்கு சக்ஸஸ் மீட்டிங் நடத்தி படம் வெற்றி என்று படக்குழு அறிவித்தது.

- Advertisement -

கடந்த மார்ச் 19ம் தேதி யூத் படம் மட்டும் வெளியானது. இளம் அறிமுக இயக்குனர் கென் கருணாஸ் இந்த படத்தை டைரக்ட் செய்து அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் அறிவித்தனர். பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்திலும் யூத் படம் வசூல் திருப்தியாக இருந்தது என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த மார்ச் 26ம் தேதி ஹேப்பிராஜ் சாத்தான் உள்ளிட்ட சில படங்கள் வெளிவந்தன ஜீவி பிரகாஷ் குமார் நடித்த ஹேப்பிராஜ் படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்துள்ளது. ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியான ஒரே படம் மேட் இன் கொரியா. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

இப்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடந்து வரும் சூழலிலும் பள்ளி வாழ்க்கையை மையப்படுத்திய யூத் படம் இளம் ரசிகர்களின் வரவேற்பால் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கோடை விடுமுறை விரைவில் துவங்க உள்ளது. அடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சட்டமன்றத் தேர்தல் என பரபரப்பான சூழல் இருந்தாலும் புதிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 21 படங்கள் வெளியான நிலையில் யூத் படம் மட்டுமே மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 3 மாதங்களில் 70 படங்கள் வெளியான நிலையில் 5 படங்கள் கூட மிகப் பெரிய வெற்றி படங்கள் என்ற எண்ணிக்கையை தொடவில்லை என்பதுதான் கசப்பான விஷயமாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு சோதனையா என்று ரசிகர்கள் தான் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்