நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. அதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரஜினியின் நீண்டகால நண்பர் நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
வருகிற 27ம் தேதி தலைவர் 173 படப்பிடிப்பை துவங்க உள்ளனர். இதில் நடிகை சாய்பல்லவி, மலையாள நடிகை ஷோபனா ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் தளபதி சிவா படங்களில் ரஜினியுடன் நடித்த ஷோபனா மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார். இவர் இது நம்ம ஆளு பொன்மனச் செல்வன் மல்லுவேட்டி மைனர் என பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே தலைவர் 173 படம் குறித்த ஒரு முக்கிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. குடும்ப டிராமாவாக உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் மகனாக மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்க உள்ளார். மலையாளத்தில் பிரபல நடிகராக முன்னணி இயக்குனராக பசில் ஜோசப் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
தமிழில் இவர் சமீபத்தில் பராசக்தி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பசில் ஜோசப்புக்கு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. எனினும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் பசில் ஜோசப் படங்கள் இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் படத்தை அட்லி இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிகர் பசில் ஜோசப் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இப்படி நட்சத்திர இயக்குனர்களின் படங்களில் நடிக்க பசில் ஜோசப்புக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரும் நிலையில், அவர் ஒரு பான் இந்தியா நடிகராகவும் மாறி வருகிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





