- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் களத்தில் குதித்த பிரபல நடிகர்கள் - அட இவங்க எல்லாம்...

நடிகர் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் களத்தில் குதித்த பிரபல நடிகர்கள் – அட இவங்க எல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ஆச்சரிப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். மக்கள் நாயகன் என அழைக்கப்பட்ட அவர் நடித்த படங்கள் எல்லாமே வெள்ளிவிழா படங்களாக வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ராமராஜன் படங்களுக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. குறிப்பாக கிராம மக்களின் நாயகனாகவே அவர் திகழ்ந்தார்.

குறிப்பாக ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படம் தமிழ் சினிமாவில் அதுவரை எந்த படமும் வசூலை குவிக்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அதி தீவிரமான ரசிகரான ராமராஜன், பிறகு ஜெயலலிதாவின் ஆதரவாளராக மாறினார். 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராகவும் அவர் இருந்து வந்தார்.

- Advertisement -

இன்று வரை அதிமுக உறுப்பினராகவே ராமராஜன் இருந்து வருகிறார். ஆனால் அவரை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவினர் யாரும் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ராமராஜனை தனது கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து அவருக்கு ஆதரவும் அரவணைப்பும் தரவில்லை.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் விபினுக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். விபினின் தந்தை வைகுண்ட ராஜா ராமராஜனின் மிக தீவிரமான ரசிகர். கடந்தாண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் படத்தை வைகுண்ட ராஜா தனது தியேட்டரில் நீண்ட நாட்கள் ஓட்டி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதற்கு கைமாறாக நன்றியாக தவெக வேட்பாளர் விபினுக்கு ஆதரவாக ராமராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுகுறித்து ராமராஜன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆலங்குளத்தில் தவெக வேட்பாளர் விபினுக்கும் மேலூரில் சுயேட்சையாக போட்டியிடும் எனது நண்பரின் மகன் முருகனுக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் நடிகர் பொன்னம்பலமும் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய்க்கு விசில் சின்னத்தில் ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராமராஜன் பொன்னம்பலம் போன்ற பிரபல நடிகர்கள் தவெக கட்சியின் ஆதரவாளர்களாக மாறி தேர்தல் பிரசாரம் செய்வது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்