- Advertisement -
Homeபொழுதுபோக்குகுடிபோதையில் இருந்த மகாப என்னை இரும்பு கம்பியால் தாக்கினார் - கானா வினோத் புகழ் ஆகிய...

குடிபோதையில் இருந்த மகாப என்னை இரும்பு கம்பியால் தாக்கினார் – கானா வினோத் புகழ் ஆகிய 3 பேர் மீது வாட்டர்மெலன் திவாகர் போலீசில் புகார்!

- Advertisement -

கஜினி படத்தில் சூர்யா போல் தர்பூசணி சாப்பிடுவது போல் ரியாக்சன் காட்டிய ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் வாட்டர் மெலன் திவாகர். தன்னை தானே தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் என்று சொல்லிக்கொள்வது வழக்கம். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் திவாகர் பங்கேற்று இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துக்கொண்ட சகப் போட்டியாளர் கானா வினோத், விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாபா மற்றும் புகழ் ஆகியோர் தன்னை தாக்கியதாக வாட்டர்மெலன் திவாகர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 7வது சீசன் கடந்த 4ம் தேதி அன்று தொடங்கியது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் இந்த முறை திருமணமான ஜோடிகளும் அவர்களுடன் இணைந்து கோமாளிகளும் சமைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்தபோது இந்த வாரம் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் பிரபலம் பாடகர் கானா வினோத் விஜய் டிவியில் தொடர்ந்து நடித்து வரும் புகழ், விஜே மாகாபா ஆனந்த் ஆகிய 3 பேரும் இணைந்து பிக்பாஸ் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான வாட்டர் மெலன் திவாகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி அரங்கில் வைத்து கடுமையாக தாக்கியதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏப்ரல் 10 அன்று கலந்து கொண்டேன். அங்கு கானா வினோத் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் தகாத வார்த்தைகளில் பேசினார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து பேசினேன்.

அப்போது கானா வினோத் புகழ் இருவரும் இணைந்து என்னை கடுமையாக தாக்கினார். அப்போது மகாபா ஆனந்த் குடிபோதையில் இருந்தார். என்னை இரும்பு கம்பியால் காலில் அடித்தார். அவர் அடித்ததால் என் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஈவிபி பிலிம் சிட்டி அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் 3 பேர் மீதும் புகார் அளித்துள்ளேன் என்று வாட்டர்மெலன் திவாகர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்