சமீபத்தில் சென்னையில் நடந்த தவெக ஆர்ப்பாட்டத்தில் ரஜினி திமுகவின் மிரட்டலுக்கு பயந்துதான் அரசியலுக்கு வரவில்லை என்று தவெக கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்களும் ரஜினி ரசிகர்களும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், என்னை பற்றி தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசியிருக்கிறார். காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது 9 மில்லியன் பார்வைக்கு மேல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால் அவர் வரவிடாமல் பண்ணியது திமுக. அவரை திமுக மிரட்டியது என்று ஆதவ் அர்ஜூனா சொன்னார். இது ரஜினியின் சூப்பர் ஸ்டார் கிரீடத்தை பறிக்கிற வார்த்தை எல்லாம் கிடையாது.
அதுக்கு வந்து ரஜினிகாந்த் எதிர்வினை ஆற்றுகிறார். அதற்கு காலம் பதில் சொல்லும் என்று அறிக்கை விடுகிறார். அதற்கு அர்த்தம் என்னவென்றால் தேர்தலில் நீங்கள் தோற்றுப் போவீர்கள். அல்லது தேர்தலில் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதுதான் ரஜினி சொன்ன அர்த்தமாக உள்ளது.
இப்படி ஒரு அறிக்கையை ரஜினி விட வேண்டிய அவசியம் என்ன? எதுவுமே இல்லை. இதை பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றியது என்றால் விஜயின் வெற்றி விஜயின் உயரம் ரஜினியை விட பெரியது. அதுதான் இன்னைக்கு உண்மை. அதுவந்து ரஜினியை கொஞ்சம் தொந்தரவு செய்திருக்கிறது.
அதுதான் இந்த அறிக்கையின் மூலம் வெளிப்பட்டதாக நான் நினைக்கிறேன். நம்மை விட உயரத்துக்குப் போன விஜய் இந்த தேர்தலில் தோற்க வேண்டும் என்று ரஜினி நினைத்திருப்பார் என்று தோன்றுகிறது என்று அந்த நேர்காணலில் ஜெ பிஸ்மி கூறியிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தோற்க வேண்டும் என்று ரஜினி ஆசைப்படுகிறார் என்று பிஸ்மி பேசியது இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.





